என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தியாகராஜசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பட்டா ளம்மன் கோவில் தெருவில் உள்ள தியாகராஜசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடை பெற்றது. விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக தியாகராஜசுவாமி கோவ¤ல் உள்ள சீதா ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகள் மீதும் கலசங்களை மீதும் புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பிறகு கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள்   கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரி மாயமானதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அருகே போதிநாயனப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 33). கட்டிட மேஸ்திரி.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அண்ணாமலை அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தீபா, கணவரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்தூர் அருகே மணல் கடத்த முயன்ற 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுபட்டு ஆற்று பகுதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று பார்த்த போது கருங்கல் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 36), அதே பகுதியை சேர்ந்த குமார் (48), பிரபு (43) ஆகிய 3 பேரும் 4 யூனிட் மணலை ஆற்று பகுதியில் குவித்து வைத்து கடத்த முயற்சி செய்துள்ள்ளனர்.

    இதில் பிரபு, குமார் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.  ரமேசை போலீசார் கைது செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி காந்தி நகர்  பசீர் முகமது லே அவுட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் என்ஜீனியர்ங் படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்து விரக்தி அடைந்த நிலையில் விக்னேஷ் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இதையொட்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கோணனூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 75). இவர் வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு நேற்று மளிகை பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வீரமலை பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் சின்னசாமி மீது மோதியது.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகி ச்சைகாக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி இன்று அதிகாலை இறந்தார். இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வாலிபர் தலையை துண்டித்து கோவிலில் மர்ம கும்பல் வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா. இவரது மகன் பிரதீப் (வயது25). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சந்திரிகா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சந்திரிகா, 4 மாதத்திற்கு முன்பு, 2-வது பிரசவத்திற்கு பெங்களூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றவர், அங்கேயே இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிரதீப் மற்றும் சிலர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மதுக்குடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், திடீரென பிரதீப் தலையை தனியாக அறுத்து படுகொலை செய்தனர். பின்னர் ஆத்திரம் அடங்காமல் அவரது தலையை ரத்தம் ரத்தம் சொட்ட... அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் வீசினர். பின்னர் அங்கிருந்து கும்பல் தப்பிசென்று விட்டனர்.

    இன்று காலை மாரியம்மன் கோவிலுக்கு வந்த சிலர், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரதீப் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பாகலூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    கோவில் வாசலில் துண்டிக்கப்பட்ட வாலிபர் தலையை மர்ம கும்பல் வீசிச்சென்ற சம்பவம், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கோவில் வாசலில் திரண்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே தகவல் அறிந்து பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து துண்டிக்கப்பட்ட பிரதீப் தலை மற்றும் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, ஓசூர் ஏ.எஸ்.பி. அரவிந்த் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

    வாலிபர் பிரதீப் கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பாகலூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரதீப்பை, 2-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து தலையை துண்டித்து கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதனால் நள்ளிரவில் பிரதீப்பை மது குடிக்க அழைத்து சென்றவர்கள் யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் பிரதீப், கள்ளக்காதல் விவகாரத்தில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது சொத்துப் பிரச்சி னையா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கோவிலில் வாசலில் வாலிபர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள கெண்டிக்கானூர் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது55). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளது.

    இந்த நிலையில் கணவன்&மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மீண்டும்  தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவலிங்கம் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி விழுந்து கிடந்தார். 

    இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள மாமரத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது32). விபத்தில் படுகாயம் அடைந்த இவர் அக்காள் வீட்டில் வசித்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து வேலு மயங்கி விழுந்து இறந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது பற்றி  நாகரசம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத் தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

     இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மது போதைக்கு அடிமையான முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி தாலுகா தானப்பட்டியை சேர்ந்தவர் நாராயணன் (வயது70). 

    இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் மகள்கள் உள்ளன. மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

    இந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய நாராயணன் சின்னார் அருகே பெடர் பள்ளி வனப்பகுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக கிடந்த நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள கல்குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது50). விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த அமரேசன் ஆகிய இரண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகரசம்பட்டி அடுத்துள்ள நெடுங்கல் பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.

    பின்னர் அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது போச்சம்பள்ளி சூரியகாந்தி ஆலை அருகில் உள்ள புளியமரத்தில் மீது நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குசிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் 2 வீடுகளில் நகை, பணத்தை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள பெரியசோகிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வி. அதே பகுதியை சேர்ந்த தமிழரசி. இவர்கள் இருவரும் நேற்று  வீட்டை பூட்டி விட்டு விவசாய வேலைக்கு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் மாலையில் செல்வி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. 

    இதையடுத்து தமிழரசியின் வீடும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த 2 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அடுத்தடுத்து 2 வீடுகளில் மர்ம நபர்கள் பட்டபகலில் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே புக்க சாகரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்கில் இட்டப்பள்ளி குட்டாவை சேர்ந்தவர் முரளி (வயது25) என்ற ஊழியர், கடந்த 5-&ந்தேதி பணியில் இருந்தார். அப்போது, புன்னாகரத்தை சேர்ந்த திம்மராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் வந்து, பெட்ரோலை கடனாக வாங்கிச் சென்றனர்.

    மறுநாள்(6-ந்தேதி), கடனை முரளி திருப்பி கேட்டபோது, பணம் தர மறுத்தும், தகராறு செய்தும் முரளியை அவர் கள் சரமாரியாக தாக்கினர்.  இதில் படுகாயமடைந்த முரளி, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து அவர் பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், திம்மராஜ் மற்றும் பாபு, சிவப்பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×