என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
புளியமரத்தில் பைக் மோதி விவசாயி சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள கல்குமாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது50). விவசாயியான இவரும், அதே பகுதியை சேர்ந்த அமரேசன் ஆகிய இரண்டு பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகரசம்பட்டி அடுத்துள்ள நெடுங்கல் பகுதியில் உள்ள ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர்.
பின்னர் அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது போச்சம்பள்ளி சூரியகாந்தி ஆலை அருகில் உள்ள புளியமரத்தில் மீது நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்குசிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






