என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தனியார் பால் நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு தனியார் பால் நிறுவன தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தில் தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் தற்காலிகமாகவும், நிரந்தமாகவும் ஆயிரணக் கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பெரும்பாலானோர் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தர்மபுரி டிஸ்ட்ரிக் மில்க் யூனியன் என்ற சங்கத்தைத் தொடங்கிக் குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சங்கம் ஆரம்பித்த பொறுப்பா ளர்கள் சிலரை திடீரென மகாராஷ்டிரா, மும்பை, தெலுங்கானா மாநிலத்திற்குப் பணி மாறுதல் செய்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 150 நாட்களாக தொடர்ந்து போராடி வரும் இந்திய தொழிற்சங்க மையம், நேற்று கிருஷ்ணகிரியில் உள்ள தொழிலாளர் துறை ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பணி மாறுதல் செய்த ஊழியர்களுக்கு மீண்டும் தர்மபுரியில் பணி வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் மீது பொய் புகார் கூறி வேலை நீக்கம் செய்யும் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்கள் எழுப்பினர்.
கிருஷணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிராமத்தில் சுற்றி திரிந்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்துக்குட்பட்ட போடூர்பள்ளம், பேரண்டபள்ளி, மற்றும் போடிச்சிப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி அருகே என 3 இடங்களில் தனித்தனியாக 3 ஒற்றை யானைகள் முகாமிட்டுள்ளன.
இதனால் 3 யானைகளின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வௌ¤யேறிய ஒற்றையானை, போடூர் கிராமத்தையொட்டி மணிக்கணக்கில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்தது. இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வௌ¤யேற முடியாமல் அச்சத்துடன் முடங்கியிருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து வனப்பகுதியை நோக்கி ஒற்றை யானை நகர்ந்தது. இதனால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதற்கிடையே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை ஆபத்தானது என்பதால் இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வௌ¤யே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8 மாதங்களாக விடியாத அரசாக தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது என்று ஓசூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று இரவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: “
தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் அதன் தலைவர்கள் இன்னும், எங்கே விடியல், எங்கே விடியல்? என்று விடியலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் விடியல் கிடைக்காத நிலையில், சாதாரண பொதுமக்களாகிய நமக்கு எங்கே விடியல் கிடைக்கும்? அப்படிப்பட்ட ஒரு குழப்பமான ஆட்சியைத்தான் நாம் கடந்த 8 மாதங்களாக பார்த்து வருகிறோம்.
பொங்கல் தொகுப்பில் மெகா ஊழல் நடந்துள்ளது. 172 கோடி டோஸ் தடுப்பூசிகளை நமது வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து செலுத்த ஏற்பாடு செய்தது மத்திய அரசு. ஆனால், சென்னையில் இருந்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை, மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க, இந்த விடியாத அரசால் முடியவில்லை. இது தான் தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள ஒரே ஒரு வித் தியாசம். 517 தேர்தல் வாக்குறுதிகளில் 7-ஐக் கூட நிறை வேற்ற முடியாத, செயலற்ற அரசாக, இந்த அரசு இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக்கூட அவர்களால் குறைக்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தான் முதல்& அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்திக்காமல், சென் னையில் அமர்ந்து காணொலி மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. அரசிற்கும், தி.மு.க.வினருக்கும் ஏன் நீட் தேர்வு வேண்டாம்? அனைத்துக் கட்சி கூட்டம் போடுவதாக, அவர்களின் கூட்டணி கட்சியினரை வைத்து கூட்டம் போட்டு, அ.தி.முக.வும், பா.ஜ.கவும் புறக்கணித்த அந்த கூட்டத்தில், நீட்டுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் போட்டு, இதற்கு தமிழக மக்களின் ஆதரவு இருப்பதாக, கவர்னருக்கு கடிதம் அனுப்புகிறார்கள்.
தனியார் மருத்துவ மனைகள் அதிகளவில் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த நீட் தேர்வுமுறை 100 சதவீதம் தேவை. நீட் தேர்வு மூலம் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியரும் படித்து டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே, ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நம்பிக்கை வைத்து பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கீழ்தெரு, காமநாயக்கன பேட்டை பகுதியில் 200 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் யாராவது இறந்தால் அந்த கிராமத்தின் இருந்து எதிரே சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணா பாளையம் கிராமத்தில் அமைந்த நத்தம் கல்லறை தோட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிணத்தை புதைத்து வந்தனர்.
இதை கிருஷ்ணா பாளையம் மக்கள் வீடுகள், தோட்டம் அருகே கல்லறைதோட்டம் இருப்பதால் பிணத்தை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனாலும் சமீபகாலமாக காவல் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பு முன்னிலையில் பிணத்தை புதைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் கீழ் தெருவை சேர்ந்த ஒருவர் இறந்தார். இதனால அவரை உடலை புதைக்க எதிர்ப்பு போலீசார்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் அடக்கம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று கீழ் தெருவை சேர்ந்த திம்மராஜ் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர் ஏற்பாடு செய்து வந்தனர். பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் தாசில்தார் நீலமேகனிடமும், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரனிடமும் பாதுகாப்பு அனுமதி வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் பாதுகாப்புடன் நேற்று மாலை 3 மணி அளவில் கிருஷ்ணா பாளையம் கல்லறைதோட்டத்தில் இறந்த திம்மராஜ் உடலை புதைத்து விட்டு வெளியே வந்த போது 100 மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், தாசில்தார் நீலமேகன் ஆகியோர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே எலிபேஸ்ட் தின்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள நகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது60). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியுடன் காணப்பட்ட பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்று உயிறுக்கு போராடி இருந்துள்ளார்.
இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலகிருஷ்ணன் நேற்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரம் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு மிக அருகில் கர்நாடக எல்லைப் பகுதியில் ஆனேக்கல் என்ற ஊர் உள்ளது.
இந்த பகுதியில், வெளிமாநிலத்திலிருந்து ஏழை பெண்களை வேலை க்கு சேர்த்து விடுவதாக அழைத்து வந்து, அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த பப்பு சுக்லா (24), ரஹீம்(22) மற்றும் நயிமுத்தீன் லஷ்கர் (26) ஆகிய அந்த 3 பேரும், ஆனேக்கல்-சந்தாபுரா முக்கிய சாலையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அசாம் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏழை பெண்களை, வேலை வாய்ப்பு கொடுப்பதாக அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
ஆனேக்கல், சந்தாபுரா, ஹெப்பகோடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீச £ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று சந்தாபுரா சாலையில் உள்ள அபார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீட்டுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லேஷ் தலைமையில் ஆனேக்கல் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு புகுந்து பப்பு சுக்லா, ரஹீம், நயிமுத்தீன் லஷ்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், வீட்டில் வீட்டில் பதுக்கி வைத்து இருந்த 3 இளம் பெண்களையும் போலீசார் மீட்டு, மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர் தினம் என்றாலே நினைவுக்கு வருவது ரோஜா மலர்கள்தான். ரோஜா என்றதுமே நம் நினைவில் வருவது ஒசூர்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் பெங்களூரை ஒட்டியுள்ள பகுதி என்பதால் ஓசூரில் நிலவும் தட்பவெப்பநிலை ரோஜா பயிரிடுவதற்கு ஏற்றதாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி ஆகிய இடங்களில் 1500 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பயிரிடப்பட்டு உள்ளன.
பசுமைக்குடில்கள் அமைத்து ரோஜா மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ரோஜா பயிரிடுதல், மலர் பறித்தல், பராமரிப்பு, கொள்முதல் என பல்வேறு பிரிவுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாகவும் ரோஜா சாகுபடி உள்ளது.
இங்கு ஆண்டுக்கு சுமார் 3 கோடி முதல் 4 கோடி வரை ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகையான ரோஜாமலர்கள் 75 சதவீதம் ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் ஆகிய விழாக்காலங்களில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டிலும் மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அரபுநாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ரோஜா வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஓசூர் பகுதிகளில் இருந்து ரோஜா பூக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை. மேலும் உள்ளூர் சந்தைகளில் விற்க முடியாமல் பூக்கள் குப்பைகளில் கொட்டப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு ரோஜா வர்த்தகம் களை கட்ட தொடங்கி உள்ளது. ஓசூர், தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் பெய்த மழை மற்றும் சாதகமான தட்பவெட்பநிலை காரணமாக ரோஜா உற்பத்தி அதிகரித்துள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடி முதல் 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட 1 கோடி மலர்கள் அதிகமாக இம்முறை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அப்பகு தியில் இருக்கும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பசுமைக்குடில் அமைத்து ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ஓசூர் ரோஜா மலர்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. கொரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த ரோஜா வர்த்தகம் இந்த ஆண்டு முன்பு போல உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
காதலர் தினத்துக்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒசூரில் இருந்து ரோஜா மலர்கள் ஏற்றுமதி தொடங்கியது. நாளை (11-ந் தேதி) வரை ஏற்றுமதி நடைபெறும். இந்த ஆண்டில் 1 கோடி முதல் 1.50 கோடி வரை ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது.
காதலர் தினத்துக்காக ஓசூரில் இருந்து பெங்களூரு மலர் வர்த்தக மையம் மூலம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து ஓசூர் சிறுகுறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு ரோஜா 16 முதல் 20 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால் உள்ளூர் சந்தையிலேயே அதே விலை கிடைக்கிறது. மேலும் ரோஜாக்களை ஏற்றுமதி செய்தால் அதற்குரிய பணம் கைக்கு வந்து சேர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் உள்ளூர் சந்தையில் உடனே பணம் வந்துவிடும். மேலும் விமான கட்டணமும் உயர்ந்து விட்டதால் உலக சந்தையில் ஓசூர் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது. ஆனால் போதிய பூக்கள் இல்லை. இதன் காரணமாக ரோஜாக்கள் விலை இந்தாண்டு உயர்ந்துள்ளது.
தற்போது 20 ரோஜாக்கள் கொண்ட கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவுக்கு 3 டன் ரேஷன் அரிசியை கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் வேனுடன் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத், மற்றும் பூவரசன், தியாகராஜன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை, தளி அடுத்த ஜவளகிரி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த பிக்கப் வேனை மடக்கி சோதனையிட்டதில், 60 மூட்டைகளில், 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம், கனகபுரா கொலகாண்டஹள்ளி பகுதியை சேர்ந்த மகேந்திரன்(வயது 30), அவரது தம்பி சூர்யா(28) என்பதும், அவர்கள் தளி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
பிக்வேன், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குட்டியப்பன் மற்றும் போலீசார் நாயக்கனூர் சர்ச் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடுவதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
இதில் சிவக்குமார் (வயது 50), கிருஷ்ணமூர்த்தி, அரியப்பன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 650&ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான போஸ் என்கிற இளம்பிரியன், பிரபாகரன் என்கிற வெங்கடேஷ் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (வயது 18).
இந்த நிலையில் நேற்று நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பதி (18), பாலகிருஷ்ணன் (23), நாரோஜ் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது நந்தகுமார் ஓட்டிய மோட்டார் சைக்கிள், பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்டு காயம் அடைந்த நந்தகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தகுமார் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் 2000 ஏக்கருக்கு மேல் பசுமை குடில்கள் அமைத்து ரோஜாக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
தாஜ்மகால், பீச் அவலன்ச், நோப்ளஸ், கோல்டு ஸ்டிரைக், சாவ்ரின், ராக் ஸ்டார், ஸ்வீட் அவலன்ச் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ரோஜா வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தின் போது வெளிநாடுகளுக்கு ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படும். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பரவல் தாக்கத்தால் குறைந்த அளவில் மட்டுமே ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு காதலர் தினத்துக்கு கடந்த 4-ந் தேதி ஏற்றுமதி தொடங்கியது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைத்தன. இதுவரை சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானம் உள்ளூர் சந்தையிலும் கிடைப்பதால் விவசாயிகள் ஏற்றுமதியில் ஆர்வமின்றி உள்ளனர்.
இதுபற்றி ஓசூர் சிறுகுறு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு ரோஜா 16 முதல் 20 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முகூர்த்த நாட்கள் அதிகமாக வருவதால் உள்ளூர் சந்தையிலேயே அதே விலை கிடைக்கிறது. மேலும் ரோஜாக்களை ஏற்றுமதி செய்தால் அதற்குரிய பணம் கைக்கு வந்து சேர ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஆனால் உள்ளூர் சந்தையில் உடனே பணம் வந்துவிடும். மேலும் விமான கட்டணமும் உயர்ந்து விட்டதால் உலக சந்தையில் ஓசூர் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் பருவநிலை மாற்றத்தால் கடந்த 1-ந் தேதி தொடங்க வேண்டிய ரோஜா பூக்கள் சாகுபடி ஒரு வாரத்துக்கு முன்பே ஜனவரி 22-ந் தேதி தொடங்கி விட்டது. ஆனால் போதிய பூக்கள் இல்லை. இதன் காரணமாக ரோஜாக்கள் விலை இந்தாண்டு உயர்ந்துள்ளது.
தற்போது 20 ரோஜாக்கள் கொண்ட கட்டு ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் போலிஸ்கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதனையொட்டி தேன்கனிக்கோட்டையில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்தக் கொடி அணிவகுப்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தொடங்கி வைத்தார்.
இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய சாலைகளான ராஜாஜி சாலை, பஸ் நிலையம், ஓசூர் சாலை, பைபாஸ் சாலை, நேதாஜி சாலை, காந்தி சாலை வழியாகச் சென்றனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ் பெக்டர்கள் நாகராஜ் , குமரன், சுப்பிரமணி , சம்பூர்ணம் , சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கெலமங்கலத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடை பெற்றது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையில் டி.எஸ்.பி. கீர்த்திகா முன்னிலையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி, குமரன், சம்பூர்ணம், சப்&-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், கார்த்திகேயன், சிற்றரசு மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் போலீசார் 150 பேர் கலந்துகொண்டனர்.






