என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் போலிஸ்கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதனையொட்டி தேன்கனிக்கோட்டையில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. இந்தக் கொடி அணிவகுப்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தொடங்கி வைத்தார்.
இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய சாலைகளான ராஜாஜி சாலை, பஸ் நிலையம், ஓசூர் சாலை, பைபாஸ் சாலை, நேதாஜி சாலை, காந்தி சாலை வழியாகச் சென்றனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, இன்ஸ் பெக்டர்கள் நாகராஜ் , குமரன், சுப்பிரமணி , சம்பூர்ணம் , சப்&இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கெலமங்கலத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடை பெற்றது.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு தலைமையில் டி.எஸ்.பி. கீர்த்திகா முன்னிலையில் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுப்பிரமணி, குமரன், சம்பூர்ணம், சப்&-இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், கார்த்திகேயன், சிற்றரசு மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் போலீசார் 150 பேர் கலந்துகொண்டனர்.
Next Story






