என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரியும் ஒற்றை யானை.
    X
    சூளகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரியும் ஒற்றை யானை.

    சூளகிரி அருகே கிராமத்தில் உலா வந்த ஒற்றை யானை-கிராம மக்கள் பீதி

    கிருஷணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கிராமத்தில் சுற்றி திரிந்த ஒற்றை யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்துக்குட்பட்ட போடூர்பள்ளம், பேரண்டபள்ளி, மற்றும் போடிச்சிப்பள்ளி அரசு மாதிரிப்பள்ளி அருகே என 3 இடங்களில் தனித்தனியாக 3 ஒற்றை யானைகள் முகாமிட்டுள்ளன.

    இதனால் 3 யானைகளின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை போடூர்பள்ளம் வனப்பகுதியில் இருந்து வௌ¤யேறிய ஒற்றையானை, போடூர் கிராமத்தையொட்டி மணிக்கணக்கில் விவசாய நிலத்தில் சுற்றி திரிந்தது.  இதனால் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வௌ¤யேற முடியாமல் அச்சத்துடன் முடங்கியிருந்தனர்.

    சிறிதுநேரம் கழித்து வனப்பகுதியை நோக்கி ஒற்றை யானை நகர்ந்தது. இதனால் கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

    இதற்கிடையே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை ஆபத்தானது என்பதால் இரவு நேரங்களில் கிராம மக்கள் வீட்டை விட்டு வௌ¤யே வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் ஆடு, மாடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×