என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
தமிழகத்தில் 8 மாதங்களாக விடியாத அரசாக தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது ஓசூரில் அண்ணாமலை பிரசாரம்
தமிழகத்தில் 8 மாதங்களாக விடியாத அரசாக தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது என்று ஓசூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று இரவு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: “
தி.மு.க ஆட்சிக்கு வந்து 8 மாதங்களாகியும் அதன் தலைவர்கள் இன்னும், எங்கே விடியல், எங்கே விடியல்? என்று விடியலை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் விடியல் கிடைக்காத நிலையில், சாதாரண பொதுமக்களாகிய நமக்கு எங்கே விடியல் கிடைக்கும்? அப்படிப்பட்ட ஒரு குழப்பமான ஆட்சியைத்தான் நாம் கடந்த 8 மாதங்களாக பார்த்து வருகிறோம்.
பொங்கல் தொகுப்பில் மெகா ஊழல் நடந்துள்ளது. 172 கோடி டோஸ் தடுப்பூசிகளை நமது வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து செலுத்த ஏற்பாடு செய்தது மத்திய அரசு. ஆனால், சென்னையில் இருந்து 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பை, மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க, இந்த விடியாத அரசால் முடியவில்லை. இது தான் தி.மு.க. அரசுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள ஒரே ஒரு வித் தியாசம். 517 தேர்தல் வாக்குறுதிகளில் 7-ஐக் கூட நிறை வேற்ற முடியாத, செயலற்ற அரசாக, இந்த அரசு இருந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையைக்கூட அவர்களால் குறைக்க முடியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத காரணத்தினால் தான் முதல்& அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக மக்களை சந்திக்காமல், சென் னையில் அமர்ந்து காணொலி மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தி.மு.க. அரசிற்கும், தி.மு.க.வினருக்கும் ஏன் நீட் தேர்வு வேண்டாம்? அனைத்துக் கட்சி கூட்டம் போடுவதாக, அவர்களின் கூட்டணி கட்சியினரை வைத்து கூட்டம் போட்டு, அ.தி.முக.வும், பா.ஜ.கவும் புறக்கணித்த அந்த கூட்டத்தில், நீட்டுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் போட்டு, இதற்கு தமிழக மக்களின் ஆதரவு இருப்பதாக, கவர்னருக்கு கடிதம் அனுப்புகிறார்கள்.
தனியார் மருத்துவ மனைகள் அதிகளவில் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த நீட் தேர்வுமுறை 100 சதவீதம் தேவை. நீட் தேர்வு மூலம் சாதாரண, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியரும் படித்து டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய முடியும். எனவே, ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நம்பிக்கை வைத்து பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.
Next Story






