search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் கும்பாபிஷேக விழா"

    • விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.
    • தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆத்தூர் நந்தனார் தெருவில் உள்ள வண்டிகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று மாலை 7.30 மணிக்கு மேல் யாக சாலையில் தோரண பூஜை. சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை, ரக்சாபந்தனம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 2-வது நாளாக சின்ன வண்டி காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கூடிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நந்தனார் தெரு கிழக்குப் பகுதியில் உள்ள ஊர்பொதுமக்கள் மற்றும் நந்தனார் கிழக்குத் தெரு இளைஞர் அணியினர் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.
    • பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள தீப்பாஞ்சி அம்மனுக்கு புதிய கோவில் கட்டுவதற்கு 18 பானை கவுண்டர்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக புதிய கோவில் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இதன் பின்னர் கோவில் கட்டும் பணி முடிவுற்ற நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு நடந்தது. அதனையொட்டி கடந்த 30-ம் தேதி வினாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து பக்கதர்களுக்கு கங்கனம் கட்டுதல் வீடுகளில் முளைபாரி இடுதல், 3 -ம் தேதி புதிய சாமி சிலைகள், கரிகோலக ஊர்வலம், மற்றும் தீப்பாஞ்சி அம்மன் மூலவர் விக்கிரஹகங்கள் யாக சாலைகளுக்கு கொண்டு வந்து அங்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது.

    இதனையடுத்து பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை நான்கு கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் கோவில் கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் அந்தபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தீப்பாஞ்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் 18 பானை கவுண்டர்கள் உள்பட ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.

    மொரப்பூர்,

    காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள பூமி சமுத்திரம் கிராமத்தில் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகர் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவினையொட்டி கடந்த 25 -ம் தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் கொடியேற்றுதல், கங்கணம் கட்டுதல் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து 26-ம் தேதி சனிக்கிழமை யாக சாலை ஆரம்பம், பிரவேசம் முதல் கால யாக சாலை பூஜை,பூர்ணாவதி,தீபாதாரணை,பிரசாதம் வழங்குதல் மற்றும் சுமங்கலி பூஜை மங்கள இசையுடன் விமானங்களில் ஸ்தூபி பிரதிஷ்டை செய்தல், மங்கள இசையுடன் யந்திர ஸ்தாபனம்,அஷ்டபந்தனம் மற்றும் கண் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து விழாவின் 3 -ம் நாளான இன்று 2-ம் கால யாகசாலை பூஜை,புண்ணிய வசனம்,நாடி சந்தானம் துவக்கம் பிரம்ம சுத்தி ரக்சன அணிவித்தல்,மந்திர புஷ்பம்,உபசாரம் மகாபூர்ணாவதி, மகா தீபாரதனை யாகத்ரா தானம்,கடம் புறப்படு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மொரப்பூர் சென்ன கேசவ பெருமாள் கோவில் அர்ச்சகர் விஜய் ஆனந்த ராம் ஐயங்கார் குழுவினர் கும்ப லக்கினத்தில் விமான கலசத்திற்கும் மூலவர் பூனாட்சி அம்மன் மற்றும் கற்பக விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலின் கோபுரத்தில் உள்ள கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கும் தெளிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள இதர கிராமங்களை சேர்ந்த கொங்கு வேளாள கவுண்டர்கள், பூந்துறை காடை குலத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசி பெற்றனர்.இவ்விழாவில் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக விழா விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தர்மகர்த்தா செல்லன்,நாட்டு கவுண்டர் தமிழரசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அடவ னப்பள்ளி கிராமத்தில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டும், புதிதாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்தும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக விழாவை யொட்டி, பண்டரி பூஜை, அன்னமய்யா கீர்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது.

    பின்னர், புனித நீர் கொண்ட குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோபுரத்தின் மீது இருந்த கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சாமிக்கு மகா தீபாராதனை செய்து சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, பிரபாகர் ரெட்டி, பாகலூர் ஊராட்சி துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • யாகசாலையில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு யாகங்கள் நடந்தது.
    • அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பாலக்கோடு

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள மஹாமாரியம்மன், மற்றும் அக்கு மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

    இந்த விழா கடந்த 6-ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை யாகசாலையில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு யாகங்கள் நடந்தேறியது.

    அதனை தொடர்ந்து கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், புண்யா ஹவாசனம், கோ பூஜை , மூலவர் அபிஷேகம் நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் நிர்வாகிகள் தங்கள் தலையின் .மீது எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினர்.

    பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து மகாமாரியம்மன் மற்றும் அக்கு மாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.

    அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    • கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் நெசவாளர் தெருவில் உள்ள மிகவும் பழமையான கரடிகுடி காரியசித்தி மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமி கோவில் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழா நிகழ்ச்சிகள் கடந்த திங்கட்கிழமை, கணபதி பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு ஹோம நிகழ்ச்சிகள், பூர்ணஹூதி, கலச ஸ்தாபனம் வாஸ்து ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக, நேற்று (செவ்வாய்கிழமை) கோ பூஜை, ருத்ராபிஷேகம், அதர்வாபிஷேகம் மற்றும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், மகா கணபதி மற்றும் வீராஞ்சநேய சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை செய்து, சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

    மேலும் விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், நெசவாளர் தெரு மற்றும் ஓசூர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அவினாசி கவுண்டன் பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக பக்த ர்கள் முளைப்பாரி மற்றும் தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து மாலை விநாயகர் பூஜை, புண்யகம், வாஸ்து சாந்தி, அங்குூரார்பணம், ரக்ஷா பந்தனன் மற்றும் கும்ப அலங்காரம் செய்யப்பட்டு, முதல் காலையாக பூஜை, உபச்சார வழிபாடு மற்றும் திருமுறை பாராயணம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை நடைபெற்றது.

    தொடர்ந்து அஷ்ட பந்தனம் மருந்து சாற்றுதல் நடை பெற்றது. விழாவையொட்டி நேற்று காலை விநாயகர் பூஜை, 2-ம் கால யாக பூஜை மகா தீபாரதனையும் நடை பெற்றது.

    இதை தொடர்ந்து விநாயகர், செல்வநாயகி அம்மன் கோபுர கலசம், மூலவர் செல்வநாயகி அம்மன், கருப்பராயர், கன்னிமார், மாயவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடை பெற்றது.

    அதை தொடர்ந்து தச தரிசனம், தசதானம், மகா அபிஷேகமும் நடைபெற்று பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் கவுந்தப்பாடி, அவினாசி கவுண்டன் பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்களும் செய்திருந்தார்கள்.

    • பக்தர்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் பஜனைகோவில் தெருவில் உள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    வாஸ்து சாந்தி, பிரதான கும்ப் ஸ்தாபனங்கள், மஹா சாந்தி ஹோமம், அஷிமோசனம், அதிவாஸத்ரய ஹோமங்கள், நித்ய ஹோமம், பூர்ணாஹிதி தொடர்ந்து கடங்கள் புறப்பாடும் அதனை தொடர்ந்து புனித தீர்த்தங்கள் கொண்டு கோபுர கலசங்கள் மற்றும் ஸ்ரீவெங்கடேசபெருமாள் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

    பின்னர் பக்தர்கள் அனைவரின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், பாலு, சுகாதார ஆய்வாளர் இளவரசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு உறுப்பி னர்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி டேம் அருகில் உள்ள பச்சிகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பழையபேயனப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளி யுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில்கும்பாபிஷேக விழா நடந்தது.

    கடந்த 5-ந் தேதி கங்க பூஜை, கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், கணபதி ஹோமம், கங்கனம் கட்டுதல், சத்துர் துவார பூஜை, பரிஹ தேவதை கலச பிரதிஷ்டையக்னேஸ்வர பிரதிஸ்டை, பூர்ண கும்பம் பிரதிஸ்டை, மகா காயத்திரி ஹோமம், ருத்திர ஹோமம், பூர்ணாஹி தீபாராதனை, தீர்த்த பிரசாதம் விநியோகத்தில் ஆகிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அன்று இரவு சுவாமி பிரதிஸ்டை நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை, கணபதி பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தது.

    பின்னர் பூரண கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, ஸ்ரீ மகாமாரியம்மன் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் பழையபேய னப்பள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற வர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா விற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்து வழிப்பட்டனர்.

     ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில், இராம கொண்ட அள்ளி, சந்தன கொடிக்கால், ஆலமரத்தூர், குட்டமடுவு, கானிக்காடு, சிங்கிலிமேடு, கவுண்டனூர் உள்ளிட்ட 9 கிராம மக்களுக்கு சொந்தமானது.

    இராம கொண்ட அள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலயங்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டு பிரமாண்ட கோபுரங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

    இந்த ஐந்து ஆலயங்களுக்கு கோவில் கும்பாபிஷேக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை நாகமரை காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    நூற்றுக்கணக்கானவர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் ஊர்வலம் வந்தனர்.

    இதில் உற்சவ அம்மன் சிலையை அலங்கரித்து, பம்பை மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது.

    இந்நிலையில் திங்கட்கிழமை முதல் ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றது, அதனை தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கற்பக விநாயகர், சிவன், அம்பாள், மற்றும் நவகிரகங்கள் ஆகிய ஐந்து ஆலய கோவில் கோபுர கலசங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து அபிஷேக பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×