என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Kumbabhishek Festival"

    பேளரஹள்ளி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி  கிராமத்தில்  கண்ணனூர் மாரியம்மன் திருக்கோவில்  மகா கும்பாபிஷேக பெருவிழா  நடந்தது. 
    இந்த விழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன்தொடங்கியது.  நேற்று அதிகாலை  கலச ஆராதனை, பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது. 
    இதனையடுத்து யாக சாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை அய்யர்கள் மற்றும் ஊர் கவுண்டர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.

     பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள்,  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  விழா குழுவினர் செய்திருந்தனர்.
    ×