என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி, பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவியை கடந்த 3-ந்தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்த மேஸ்திரி கோவிந்தராஜ் (வயது 22) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகமணி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்த பிளஸ்- 1 மாணவி, கடந்த 4-ந் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.
அதில் மாணவியை, ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ் (19) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கெங்கி நாய்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை.
இதனால் மனமுடைந்த ஆறுமுகம் இரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தார். இதில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் அதிகாலை இறந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பிறந்து 4 நாட்களான பெண் குழந்தை இறந்தது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்பு குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 31) இவருக்கு ஈஸ்வரி (29) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஈஸ்வரிக்கு கடந்த 3&ந் தேதி சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து மறுநாள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிறந்த குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர். கடும் காய்ச்சலால் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை நேற்று இறந்தது.
இது குறித்து குழந்தையின் தந்தை பிரபாகரன் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிபட்டி வனத்துறையின் சார்பில் வேட்டை தடுப்பு முகாம் அருகில் உள்ள மான் தொட்டிகளுக்கு நீர் நிரப்பும் பணி நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் படி சரக அலுவலர் மகேந்திரன் அறிவுரைப்படி கல்லாவி பிரிவு நொச்சிப்பட்டி காப்பு காட்டில் கடுமையான வறட்சியின் காரணத்தினால் வன உயிரி னங்கள் நீரின்றி தவித்து வரும் சூழ்நிலையை கருதி வன உயிரினங்கள் நீர் அருந்தும் வகையில் 2 மான் தொட் டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்றது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட தொட்டி மற்றும் 6 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டு வன உயிரினங்கள் நீர் அருந்தும் வண்ணமாக நீர் நிரப்பும் பணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் காயத்ரி (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன்(39). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குகனிஷ்கா (7) என்ற மகளும், சர்வன் (4) என்ற மகனும் இருந்தனர்.அவர்களில் கனிஷ்கா தனியார் பள்ளி ஒன்றில் 2&ம் வகுப்பு படித்து வந்தாள்.
வெங்கடேசன் திருப்பதியில் தொப்பி வியாபாரம் வருகிறார். பெரும்பாலான நாட்கள் அங்கேயே இருப்பார். அவ்வ போது தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
வெங்கடேசனின் தாய் மாற்றுத்திறனாளியான உதயலட்சுமி (75) மருமகள் காயத்ரியுடன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மதியம் காயத்ரி குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் மாடி அறையில் தூங்க செல்வதாக அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து காயத்ரி மட்டும் கீழே வந்தார்.
பின்னர் அவர் நாற்காலி ஒன்றை எடுத்தபடி மேலே மாடி அறைக்கு சென்றார். இதை கவனித்த மாமியார் உதயலட்சுமி எதற்காக நாற்காலியை எடுத்து செல்கிறாய் எனகேட்டார். அதற்கு காயத்ரி கயிறு கட்ட வேண்டி உள்ளது என கூறினார்.
இந்தநிலையில் மாடிக்கு சென்ற காயத்ரி மற்றும் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் உதயலட்சுமி சந்தேகம் அடைந்தார்.
அவர் மேலே சென்று பார்த்த போது மாடியில் விட்டத்தில் குழந்தைகள் 2 பேருடன் காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்த உதயலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து அக்கம் பக்கத் தினருக்கு தெரிவித்தார். அவர்கள் இது குறித்து மத்தூர்போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மத்தூர்போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட காயத்ரி மற்றும் குழந்தைகள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் காயத்ரி தனது குழந்தைகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காயத்ரி தம்பி திவாகர் மற்றும் அவரது தாயும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதன் காரணமாக காயத்ரி தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மத்தூர் அருகே குடும்ப தகராறில், 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நகைக்கடையில் துளை போட்டு திருட முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்லால் (வயது 37).
இவர் பாகலூரில் மாலூர் சாலையில், நகை கடை மற்றும் மற்றும் நகை அடமான கடை வைத்துள்ளார். கடந்த, 3&ந் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் நகைக்கடையில் உள்ள நகைகளை திருடுவதற்காக, கடையின் பின்பக்க சுவற்றை துளையிடுவதற்கு எந்திரம் மூலமாக ஓட்டை போட்டனர். அப்போது கடைக்குள் தங்கியிருந்த ஊழியர்கள் மானக், பவான் ஆகியோர் சத்தம் கேட்டு எழுந்து ராம்லாலுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த ராம்லாலை பார்த்ததும், கொள்ளையடிக்க வந்த நபர் தப்பி ஓடி விட்டார். விசரணையில் அவர் அந்த பகுதியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலம் சிக்கந்தர்பூர் பகுதியை சேர்ந்த யஷ்பால் (22) எனதெரிய வந்தது.
இது குறித்து ராம்லால் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேன் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, மாரலதேவரபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடப்பா (60).
கூலித் தொழி லாளிகளான இருவரும் நேற்று முன்தினம் மொபட்டில் சென்றுள்ளனர். மொபட்டை கிருஷ்ணராஜ் ஓட்டினார். கட்டி கானப்பள்ளியில், காளிகாவரம் சாலை, முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த மகேந்திரா வேன் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணராஜ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். வெங்கடப்பா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்துசூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரோஸி (வயது 37). கூலி தொழிலாளியான இவர் கடன் தொல் லையால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 23&ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டுசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஸிநேற்று முன்தினம் உயி ரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் அருகே பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் கள்ளக்காதலியை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 33). காய்கறி வியாபாரி.
இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம், அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சிலம்பரசன் (36) என்பவருக்கும் கள்ளத் தொடர்புஇருந்து வந்தது.
இந்த நிலையில் சிலம்பரசன் கடந்த 3 மாதங்களாக சங்கீதா வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த, 3-ந் தேதி பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் சங்கீதாவை சிலம்பரசன் அடித்து உதைத்தார்.
இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் சிலம்பரசனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 54). இவர் ஒப்பதவாடி அருகே உள்ள பொன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காககிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா முக்கரம்பள்ளியை சேர்ந்தவர் ராமன் (வயது 58). கூலித் தொழிலாளி.
இவர் மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் - ரெயில் நிலைய சாலையில் மூலக்கடை பக்கமாக சென்று கொண் டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ அவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீசார் சிந்தகும்மனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய சிந்தகும்மனப்பள்ளியை சேர்ந்த முனியப்பன்(வயது 50), சிவக்குமார் (34), முனிராஜ் (32), எட்ரப்பள்ளி மூர்த்தி (30), வீரமணி (27), சின்ன கொத்தூர் முருகன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.






