என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நகை கடையில் துளை போட்டு திருட முயற்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நகைக்கடையில் துளை போட்டு திருட முயன்ற வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்லால் (வயது 37).

     இவர் பாகலூரில்  மாலூர் சாலையில், நகை கடை மற்றும் மற்றும் நகை அடமான கடை வைத்துள்ளார். கடந்த, 3&ந் தேதி இரவு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் நகைக்கடையில் உள்ள நகைகளை திருடுவதற்காக, கடையின் பின்பக்க சுவற்றை துளையிடுவதற்கு எந்திரம் மூலமாக ஓட்டை போட்டனர். அப்போது கடைக்குள் தங்கியிருந்த ஊழியர்கள் மானக், பவான் ஆகியோர் சத்தம் கேட்டு எழுந்து ராம்லாலுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அங்கு வந்த ராம்லாலை பார்த்ததும், கொள்ளையடிக்க வந்த நபர் தப்பி ஓடி விட்டார். விசரணையில் அவர் அந்த பகுதியில் வசித்து வந்த உத்தரபிரதேச மாநிலம் சிக்கந்தர்பூர் பகுதியை சேர்ந்த யஷ்பால் (22) எனதெரிய வந்தது. 

    இது குறித்து ராம்லால் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×