என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    வேன் மோதி கூலித்தொழிலாளி பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேன் மோதி கூலித்தொழிலாளி பலியானார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, மாரலதேவரபள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடப்பா (60). 

    கூலித் தொழி லாளிகளான இருவரும் நேற்று முன்தினம்  மொபட்டில் சென்றுள்ளனர். மொபட்டை கிருஷ்ணராஜ் ஓட்டினார். கட்டி கானப்பள்ளியில், காளிகாவரம் சாலை, முனியப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த மகேந்திரா  வேன் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கிருஷ்ணராஜ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். வெங்கடப்பா படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த விபத்து குறித்துசூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×