என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் கள்ளக்காதலியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் அருகே பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் கள்ளக்காதலியை தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (வயது 33).  காய்கறி வியாபாரி.

    இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம், அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சிலம்பரசன் (36) என்பவருக்கும் கள்ளத் தொடர்புஇருந்து வந்தது.

    இந்த நிலையில் சிலம்பரசன் கடந்த 3 மாதங்களாக சங்கீதா வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த, 3-ந் தேதி பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் சங்கீதாவை சிலம்பரசன் அடித்து உதைத்தார். 

    இது குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் சிலம்பரசனை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×