என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்ட்டார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பெரிய குத்திபாலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனிரத்தினம்மா (30). கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. 

    இதில் கிருஷ்ணன் தனது மனைவி முனிரத்தினம்மாவின் விரல்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். அது குறித்து முனிரத்தினம்மா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் மாயமானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ஐஸ்வரியா. இவர்களக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்தநிலையில் ஐஸ்வரியா திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்துள்ள நாகாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்ணின் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
    வேப்பனப்பள்ளி:

    சின்னகொத்தூரில் நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து சின்ன கொத்தூரில் ஆய்வு மேற்கொண்டது. அங்கு சாக்கியம்மாள் கோவில் என்ற இடத்தில் மேற்கொண்ட ஆய்வில், அக்கோவிலில் இருந்த உடைக்கப்பட்ட சாஸ்தா சிலையும், அருகே உள்ள இடங்களையும் ஆய்வு செய்தபோது, மண்ணில் ஒரு நடுகல் புதைந்திருப்பது தெரியவந்தது. அந்த இடத்தினை ஊர்மக்கள் உதவியுடன் தோண்டி நடுகல்லை வெளியே எடுத்தனர். 

    இது குறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-&

    இந்த நடுகல் 16-&ம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. நடுகல்லில் உள்ள பெண், தோளில் மாலையுடனும், பிற அணிகலன்களுடனும், ஒரு விரலை உயர்த்தி காட்டிய நிலையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் போது, இப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் தெரிய வருகிறது.

    அப்பெண்ணை ஒரு ஆண் வீரன் வெட்டுகிறான். அவனும் போரிடும் நிலையில் இல்லை என்பது தோற்றத்தில் இருந்து தெரிய வருகிறது. நரபலி கொடுத்தபின் இவரை தெய்வமாக அந்த பகுதி மக்கள் வழிபட்டு இருக்கிறார்கள் என்பது இந்த நடுகல் அமைப்பில் இருந்து தெரிய வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, சிவன் கோவில் புனரமைப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு நடுகல் இதன் தோற்றத்தினை அப்படியே பெற்று இருந்ததுடன் அதில் கல்வெட்டும் காணப்பட்டது. அதில், “தீத்தமலை உடனே தலை வெட்டு” என்ற வாசகம் இடம்பெற்று இருக்கின்றது.

    தீர்த்தம் என்ற இடம் இந்த இடத்தில் இருந்து, 4 கிலோ மீட்டர் தொலைவில் சிவன்கோவில் உள்ள இடம் ஆகும். தியாகத்தின் மறு உருவம் பெண் என்பதற்கான ஆதாரமாக, ஒரு வேண்டுதலுக்காகவோ, போருக்காகவோ, வேறு முக்கிய நிகழ்வுக்காகவோ இவர் தானாக நரபலிக்கு முன் வந்திருப்பது இந்த நடுகல் மூலம் தெரிய வருகிறது.

    சாக்கியம்மாள் என்று இவர்கள் பெயர்வைத்திருப்பது தெருகூத்தின் வழிவந்ததாக இருக்கக் கூடும். ஆனால் இவருக்கு வேறு பெயர் இருந்திருக்கும். காலத்தின் மாற்றத்தில் இது செல்லியம்மன் என அழைக்கப்படுகிறது. தன் தலையை தானே அறுத்து பலியிடும் நவகண்ட சிற்பத்திலிருந்து இது வேறுபட்டது. இது தமிழகத்தின் நடுகல் வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெறும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது  வரலாற்றுக் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், விஜயகுமார், ரவி, செல்வகுமார் மற்றும் ஊர்மக்கள் உடன் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது போலீசார் மடக்கி பிடித்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய் வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவேரிப்பட்டணம் சப்-&இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலை மையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நின்றிருப்பதை கண்டு அவர்களை அழைத்து  விசாரணை நடத்தினர். அப்போது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ளகொத்தலம் தாசன்பெயல் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது40), கஞ்சி கொட்டாய் வேட்ராயன் (எ) தேக்கன் ஆகியோரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 1கிலோ100 கிராம் அளவில் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்கள் இதை ஓசூரில் உள்ள ஒருவருக்கு விற்க முற்பட்ட போது ரகசிய தகவலின் பேரில் கையும் களவுமாக பிடிபட்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே குழந்தையுடன் பெண் மாயமாகியுள்ளார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் நாதகுமார் (வயது37). வாணியம்பாடியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா. இவர்களுக்கு மகாஜெஸ்சின் என்கிற 4 வயதில் மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று கீர்த்தனா தனது  மகனுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மத்தூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கங்கலேரி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பிந்து (வயது51). இவர் நேற்று ஜாகீர் நாற்றாம்பள்ளி பிரிவு சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த  புல்லட்டில் வந்த மர்ம நபர் பிந்து அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இதனை பார்த்த அருகில்  இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். 

    இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செயின் பறித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (22) என்பது தெரியவந்தது. உடனே பெண்ணிடம் பறித்த 4 தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண் ணிடம் செயின்பறித்த சுதாகரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் உரிய இழப்பீடு வழக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் விவசாயிகள் தக்காளி, ராகி, சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

    இதையறிந்த விவசாயிகள் விரைந்து சென்று வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டும், சத்தம் போட்டும் யானைகளை விரட்டினர். ஆனால் யானைகள் அங்கேயே முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து யானைகளை அருகிலுள்ள வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். இந்த யானைகள் மீண்டும் விவசாய நிலங்களில் புகாமல் தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வனப்பகுதியில் யானைகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் யானைகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டியில் பெற்ற மகளை தள்ளி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    தளி அருகே குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டியில் மகளை தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி புஷ்பா (வயது27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மதுபாலா (5) என்ற மகள் இருந்தாள். 

    இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா தனது மகள் மதுபாலாவுடன் வீட்டின் அருகே உள்ள 16 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றார். 

    பின்னர் மகளை தொட்டியை எட்டி பார்க்குமாறு புஷ்பா கூறி உள்ளார். இதனால் மதுபாலா தொட்டியை எட்டி பார்த்தாள். அப்போது மகள் என்று கூட பாராமல் அவளை தொட்டிக்குள் தள்ளி புஷ்பா கொன்றார். பின்னர் அவரும் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனிடையே தண்ணீரில் மூழ்கி பலியான 2 பேரும் தொட்டியில் பிணமாக மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து அவர்கள் தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்த தற்கொலை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குடும்ப தகராறு காரணமாக மகளை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொன்று விட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மனைவி அலமேலு (வயது50). நேற்று இவர் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது வாழைத் தோட்டம் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து அலமேலு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். 

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூரில் ஓட்டல் காவலாளி கொலை வழக்கில் கைதான 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
    ஓசூர்:

    ஓசூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஓட்டலில் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை குத்திக் கொலை செய்து, ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17,000 ரூபாயை திருடி சென்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது60). இவர், ஓசூர் ஆவலபள்ளி பகுதியில் அவரது மகள் செல்வி என்பவரது வீட்டில் வசித்து வந்தார். மேலும், ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஒரு  ஓட்டலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த மாதம் 26&ந்தேதி, வழக்கம் போல், ஹோட்டலுக்கு பணிக்கு வந்த தாமோதரன் இரவு 11 மணிக்கு பணி முடிந்த பின்ப ஓட்டலுக்கு உள்ளே தூங்கினார்.  அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த 17 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

    இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியை சேர்ந்த அப்ரீத் (எ) சகுத்தன், (23,)தோசிப் என்ற தீபு (21) மற்றும், 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார்  கைது செய்தனர். இதையடுத்து கைதான அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அப்ரித், தோசிப் ஆகியோரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், 16 வயது சிறுவனை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
    அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தேன்கனிகோட்டை:

    அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்த்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் நேற்று எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 50-&க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகள் ஒவ்வொன்றாக மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டன. 

    அப்போது சீறிப்பாய்ந்த மாடுகளை இளைஞர்கள் அடக்கி தங்களது வீரத்தை நிலை நாட்டி பரிசுகளை தட்டி சென்றனர். இந்த எருதாட்ட விழாவை ஏ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா என்பவரது மகன் சதீஷ் (வயது19) என்பவர் கண்டு ரசித்தார்.

    அப்போது சீறிபாய்ந்து வந்த மாடு ஒன்று கூட்டத்தில் புகுந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த வாலிபர் சதீசை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விழாவில் மாடு முட்டி வாலிபர் இறந்ததால் எருதாட்டத்தை போலீசார் நிறுத்தினர். பின்னர் போலீசார் மாடு முட்டி உயிரிழந்த சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எருதாட்ட விழாவில் மாடு முட்டி வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், காவலாளியிடம், கத்திமுனையில் தங்க செயினை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மூக்கண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 44) இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை பணியை முடித்துக்கொண்டு ரிங்ரோடு வழியாக சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து, கத்திமுனையில் மிரட்டி செல்வகுமார் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பியோடிவிட்டார். 

    இது குறித்து, ஓசூர் சிப்காட் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். அதன் போலீசார் வழக்கு பதிவு செய்து, மத்திகிரியை சேர்ந்த முரளி (19) என்பவரை கைது செய்தனர்.
    ×