என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பீரோக்களை உடைத்து 13 பவுன் நகையை திருடிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், அரசனட்டி பகுதியை சேர்ந்தவர்  முரளிதரன் (வயது58). சம்பவத்தன்று இரவு, இவர்  வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் மேல்தளத்தில் தூங்க சென்றுவிட்டார். 

    நேற்று காலை முரளிதரன் எழுந்து பார்த்த போது, தன் வீட்டின் முன்கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று அறைகளை பார்த்தார். 

    அப்போது, கீழ் தளம் மற்றும் மேல்தளத்தில் உள்ள அறைகளில்  இருந்த பீரோவை உடைத்து மர்ம நபர்கள்  13 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை தெரியவந்தது.

    இது குறித்து, அவர் சிப்காட் போலீசில் புகார் கொடுத் தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர், 

    மகாராஷ்டிரா மாநிலத் தில் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட 37-&க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில்  தொடர்புடைய அப்துல் ஆசிப் என்ற பிரபல ரவுடி, நீண்ட நாட்களாக சிக்காமல் மும்பை போலீசாருக்கு தண்ணி காட்டி வந்தார்.

    அந்த குற்றவாளி,  மகாராஷ்டிரா  மாநிலத்திலிருந்து தலைமறைவாகி, ஓசூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில், பிரபல இரு சக்கர வாகனம்  தயாரிக்கும் தொழிற்சாலை அருகே கர்நாடக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

    மேலும் ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தையும் அவர் கண்டுரசித்து சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த தகவல்களை அறிந்த மகாராஷ்டிரா போலீசார், உடனடியாக ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி  காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், அத்திப்பள்ளி  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த குற்றவாளி தங்கிருக்கும் ரகசிய தகவல், மும்பை போலீசாருக்கு கிடைத்தது.

    அதன் பேரில், மும்பை போலீசார் விரைந்து வந்து அத்திப்பள்ளி போலீசார் உதவியுடன் தனியார் விடுதியில் தங்கி இருந்த மும்பை ரவுடி அப்துல் ஆசிப் என்கிற இலியாஸ் தங்கியிருந்த அறையை  ரகசியமாக மாற்று சாவியால் திறந்து, அந்த குற்றவாளியை  சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்தனர். 

    மேலும் அந்த குற்றவாளியிடம் இருந்து   தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கி, 10-&க்கும் மேற்பட்ட செல்போன்கள்,  20&-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 பென் டிரைவ்களை போலீசார் கைப்பற்றினர்.

     பின்னர் அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் தலைமையில் போலீசார், அந்த குற்றவாளியை, அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து   மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் எருதுவிடும் விழா நடந்தது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா சந்தூர் கிராமத்தில் நேற்று 5&வது ஆண்டு எருதுவிடும் விழா நடந்தது. 

    இதில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள், கர்நாடக,  ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடைத்துறை உதவி இயக்குநர் முரளிசதானந்தம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அனுமதித்தனர். 

     காளைகளுக்கு கோ-பூஜை செய்து, வாடி வாசல் வழியாக ஒவ்வொரு காளையாக 125 மீட்டர் தூரம் 2 சுற்றுகள் ஓட விடப்பட்டு, அது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அதில் எந்த காளை குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த விநாடிகளில் கடக்கிறதோ அந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அதன்படி முதல் பரிசாக ரூ.70 ஆயிரம், 2வது பரிசாக ரூ.60 ஆயிரம், 3வது பரிசாக ரூ.50 ஆயிரம் என முறையே 50-க்கும் மேற்பட்ட ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.    

    எருது விடும் விழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்திருந்தனர். இதனையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில், 50&க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கிருஷ்ணகிரியில் மாயமான பிளஸ்&2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி பழையபேட்டை குப்பா ரோட்டை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் 1-ந் தேதி வீட்டை விட்டு சென்ற மாணவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நாகமணி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

    கிருஷ்ணகிரி அருகேஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.
    கிருஷ்ணகிரி, 

    திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுரேஷ் (வயது 13). ஊத்தங்கரையில் அரசு பள்ளியில் 7&ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அருகே கொண்டேபள்ளி ஏரியில் சுரேஷ் குளித்தான். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். சிறிதுநேரத்தில் சுரேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுபற்றி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருகிறது. பல மாடி கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் தரை மட்டமாகி வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியை சேர்ந்தவர் ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ் (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கெர்சன் நகரில் ‘மரைன் என்ஜினீயரிங்’ 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருகிறது. பல மாடி கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் தரை மட்டமாகி வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். பாதுகாப்பான இடம் தேடியும், உணவு தேடியும் அலையும் நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் போர் நடைபெறும் இடத்தில் சிக்கியுள்ள மாணர் ஆரோக்கிய செபஸ்டின்ராஜ், கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ ஒன்றை வெளயிட்டுள்ளார்.

    அதில் அவர், ‘‘ உக்ரைனின் கெர்சன் நகரில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் சிக்கியுள்ளோம். எங்கு பார்த்தாலும் குண்டு போடுகிறார்கள். கட்டிடங்கள் இடிந்து விழுந்து தீப்பிடித்து எரிகிறது. நாலா புறமும் மக்கள், உயிரை காப்பாற்ற ஓடி ஓளியும் நிலை உள்ளது. நாங்கள் உதவிகள் கேட்டும் யாரும் உதவவில்லை.

    கெர்சன் நகர், தற்போது ரஷியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இங்கிருந்து யாரும் எல்லையை தாண்டி செல்ல முடியவில்லை. இதுபற்றி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்தோம். இதை பார்த்து மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டும். இந்த பகுதியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாட்டின் எல்லையான ஒடேசா நகருக்கு அனுப்பி வைத்தால் கூட, நாங்கள் பத்திரமாக உயிருடன் திரும்ப முடியும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள ஓசூர் மாணவரின் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தனியார் கம்பெனி 70 அடி உயர டவர் மீது 4 வாலிபர்கள் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி அருகே குண்டு குறுக்கி என்ற பகுதியில் தனியார் கார் கம்பெனி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்பேரில் 15 பேர் வேலைக்கு சேர்ந்தனர். அதாவது வாணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 33), தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை சேர்ந்த வெஙகடேசன் (28), சூளகிரி அருகே மேடுபள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (32), காவேரிப் பட்டணத்தை சேர்ந்த சத்யராஜ் (28) உள்பட 15 பேர் வேலைக்கு சேர்ந்தனர்.

    இந்த நிலையில் ஒப்பந் தப்படி, அவர்கள் 15 பேருக் கும் பணி கடந்த 2020&ம் ஆண்டுடன் முடிந்து விட்டது. இதனால் 15 பேரையும் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

    இதையடுத்து வேலை இழந்த 15 பேரும், மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். ஆனால் நிர்வா கம் மறுத்து விட்டது. ஒப்பந் தப்படி மட்டுமே பணி  காலம் முடிந்து விட்டது என்று தெரிவித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விஜயகாந்த் உள்பட 15 பேரும் நிர்வாகத்திடம் வேலை கேட்டு அலைந்து வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் விஜயகாந்த் உள்பட 15 பேரும், தனியார் கார் கம்பெனிக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்த், வெங்கடேசன், கிருஷ்ணன், சத்யராஜ் ஆகிய 4 பேரும், கம்பெனி கேட்டின் மேல் ஏறி உள்ளே சென்றனர்.

    அங்கு 70 அடி உயர புகை கூண்டின் மேல் 4 பேரும் ஏறினர். மற்ற 11 பேரும் கம்பெனி வௌ¤யே நின்றனர்.

    அப்போது டவரில் ஏறி நின்ற விஜயகாந்த் உள்பட 4 பேரும், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிரட்டினர்.

    இதை பார்த்து கம்பெனி காவலாளிகள், மற்றும் ஊழி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன், மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து டவரில் ஏறிய 4 பேரும் மிரட்டி வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன், ஒலிபெருக்கி மூலம் பேசினார். நிர்வாகத் திடம் பேசி வேலை வழங் குவது குறித்து முடிவு எடுக் கலாம். முதலில் டவரில் இருந்து கீழே இறக்குங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து முதலில் விஜயகாந்த், டவரில் இருந்து கீழே இறங்கினார். இதை யடுத்து கிருஷ்ணன், வெங் கடேசன், சத்யராஜ் ஆகியோர் காலை 9 மணியளவில் கீழே இறங்கினர்.

    இதன்பிறகு தான் போலீசார் மற்றும் கம்பெனி ஊழியர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் 4 மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வைக்கோல் பாரம் ஏற்றி வந்த போது டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலியானார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னப்பள்ளி அருகே கரனாகப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயப்பா (எ) குண்டப்பா. இவரது மகன் தினேஷ்குமார் (வயது17). டிராக்டர் டிரைவரான இவரும், காமன் தொட்டியை சேர்ந்த பெரியசாமி (30) உள்பட 3 பேரும் நேற்றுமாலை வைக்கோல் பாரம் ஏற்றி கொண்டு சூளகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

    அப்போது மருதாண்டப்பள்ளி அருகே வந்த போது டிராக்டர் கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி தினேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை&பணம் கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதிக்குட்பட்ட ஏ.வி.எஸ்.லே-அவுட்டில் வசித்து வருபவர் சுடேஷ் (வயது37). இவர் முனிபோயம்தொட்டியில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் இவர் 7-ந்தேதி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு மல்லசந்திரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் நெக்லஸ், தோடு, வளையல், மோதிரம் உட்பட 6 பவுன் தங்க நகைகள், ரூபாய் 50 ஆயிரம் காணவில்லை. மேலும் விலை உயர்ந்த டி.வி.யும் திருடி விட்டு சென்றுள்ளனர்.

    ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சுடேஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை நடந்த வீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டது.  அதில் 2 கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. 

    அதன் அடிப்படையில் போலீசார் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஸ்ரீகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், -தியாகரசப்பள்ளி கிராமத்தில் மிக பழமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் ஷேக்ரஷீத் கலந்து கொண்டார். 

    இதில் சாமனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சாமில்பாஷா, மருதாண்டப் பள்ளி ஊராட்சி மன்றதலைவர் சுதாவேணு மற்றும் ஊர்பிரமுகர்கள்  சந்திரப்பா, ஸ்ரீராம், சின்னப்பா, ரவி உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2.5 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் ஆனது.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. 

    இதில் கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் கொப்பரை தேங்காய் 2.5 டன் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கேரளா, சேலம், வெள்ளக் கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் கொள்முதல்  செய்ய வந்திருந்தனர். 

    கிலோ 85 ரூபாய் முதல் 97 வரை ஏலம் போனது. இதில் வேளாண் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுந்தரம், பொது மேலாளர் முருகன், மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் நேற்று 3ம் ஆண்டு எருது விடும் திருவிழா நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 400&க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். 

    எருதுகளை குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு, ஸ்டாப் வாட்ச் மூலம் கண்காணித்து, குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை  கடக்கும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு, முதல் பரிசாக, ஒரு லட்சத்து ஒரு ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரத்து ஒரு ரூபாயும், மூன்றாம் பரிசாக 65 ஆயிரத்து ஒரு ரூபாயும் என மொத்தம் 12 பரிசுகள் வழங்கப்பட்டன. எருது விடும் விழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்திருந்தனர். இதையொட்டி பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ×