என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகை கூண்டு டவர் மீது 4 பேர் ஏறி நிற்பதையும், படத்தில் வாலிபர் விஜயகாந்த்   டவரில் நின்று கொண்டு இருப்பதையும்
    X
    புகை கூண்டு டவர் மீது 4 பேர் ஏறி நிற்பதையும், படத்தில் வாலிபர் விஜயகாந்த் டவரில் நின்று கொண்டு இருப்பதையும்

    தனியார் கம்பெனி 70 அடி உயர டவர் மீது 4 வாலிபர்கள் ஏறி தற்கொலை மிரட்டல்

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தனியார் கம்பெனி 70 அடி உயர டவர் மீது 4 வாலிபர்கள் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி அருகே குண்டு குறுக்கி என்ற பகுதியில் தனியார் கார் கம்பெனி உள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இங்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்பேரில் 15 பேர் வேலைக்கு சேர்ந்தனர். அதாவது வாணியம்பாடியை சேர்ந்த விஜயகாந்த் (வயது 33), தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை சேர்ந்த வெஙகடேசன் (28), சூளகிரி அருகே மேடுபள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (32), காவேரிப் பட்டணத்தை சேர்ந்த சத்யராஜ் (28) உள்பட 15 பேர் வேலைக்கு சேர்ந்தனர்.

    இந்த நிலையில் ஒப்பந் தப்படி, அவர்கள் 15 பேருக் கும் பணி கடந்த 2020&ம் ஆண்டுடன் முடிந்து விட்டது. இதனால் 15 பேரையும் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

    இதையடுத்து வேலை இழந்த 15 பேரும், மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திடம் கேட்டு வந்தனர். ஆனால் நிர்வா கம் மறுத்து விட்டது. ஒப்பந் தப்படி மட்டுமே பணி  காலம் முடிந்து விட்டது என்று தெரிவித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விஜயகாந்த் உள்பட 15 பேரும் நிர்வாகத்திடம் வேலை கேட்டு அலைந்து வந்தனர். ஆனால் எந்த பலனும் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் விஜயகாந்த் உள்பட 15 பேரும், தனியார் கார் கம்பெனிக்கு வந்தனர். பின்னர் விஜயகாந்த், வெங்கடேசன், கிருஷ்ணன், சத்யராஜ் ஆகிய 4 பேரும், கம்பெனி கேட்டின் மேல் ஏறி உள்ளே சென்றனர்.

    அங்கு 70 அடி உயர புகை கூண்டின் மேல் 4 பேரும் ஏறினர். மற்ற 11 பேரும் கம்பெனி வௌ¤யே நின்றனர்.

    அப்போது டவரில் ஏறி நின்ற விஜயகாந்த் உள்பட 4 பேரும், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் டவரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வோம்’ என்று மிரட்டினர்.

    இதை பார்த்து கம்பெனி காவலாளிகள், மற்றும் ஊழி யர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மனோகரன், மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் ஓசூரில் இருந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    தொடர்ந்து டவரில் ஏறிய 4 பேரும் மிரட்டி வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன், ஒலிபெருக்கி மூலம் பேசினார். நிர்வாகத் திடம் பேசி வேலை வழங் குவது குறித்து முடிவு எடுக் கலாம். முதலில் டவரில் இருந்து கீழே இறக்குங்கள் என்று கூறினார்.

    இதையடுத்து முதலில் விஜயகாந்த், டவரில் இருந்து கீழே இறங்கினார். இதை யடுத்து கிருஷ்ணன், வெங் கடேசன், சத்யராஜ் ஆகியோர் காலை 9 மணியளவில் கீழே இறங்கினர்.

    இதன்பிறகு தான் போலீசார் மற்றும் கம்பெனி ஊழியர்கள் நிம்மதி பெருமுச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் 4 மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    Next Story
    ×