என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
போச்சம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
தருமபுரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மனைவி அலமேலு (வயது50). நேற்று இவர் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வாழைத் தோட்டம் என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து அலமேலு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அலமேலு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






