என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி
Byமாலை மலர்8 March 2022 10:17 AM GMT (Updated: 8 March 2022 10:17 AM GMT)
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபரை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்கலேரி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி பிந்து (வயது51). இவர் நேற்று ஜாகீர் நாற்றாம்பள்ளி பிரிவு சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த புல்லட்டில் வந்த மர்ம நபர் பிந்து அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செயின் பறித்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (22) என்பது தெரியவந்தது. உடனே பெண்ணிடம் பறித்த 4 தங்க செயினை போலீசார் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பெண் ணிடம் செயின்பறித்த சுதாகரை கைது செய்தனர்.
Next Story
×