என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
காவேரிபட்டணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது போலீசார் மடக்கி பிடித்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது போலீசார் மடக்கி பிடித்தனர்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோரனஅள்ளி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய் வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவேரிப்பட்டணம் சப்-&இன்ஸ்பெக்டர் அறிவழகன் தலை மையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நின்றிருப்பதை கண்டு அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ளகொத்தலம் தாசன்பெயல் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது40), கஞ்சி கொட்டாய் வேட்ராயன் (எ) தேக்கன் ஆகியோரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 1கிலோ100 கிராம் அளவில் சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இவர்கள் இதை ஓசூரில் உள்ள ஒருவருக்கு விற்க முற்பட்ட போது ரகசிய தகவலின் பேரில் கையும் களவுமாக பிடிபட்டனர்.
Next Story






