என் மலர்
உள்ளூர் செய்திகள்

நொச்சிப்பட்டி காப்புகாட்டில் தொட்டியில் நீர் நிரப்பிய வனத்துறையினர்.
வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பிய வனத்துறையினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வனவிலங்குகள் தாகம் தணிக்க தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பினர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிபட்டி வனத்துறையின் சார்பில் வேட்டை தடுப்பு முகாம் அருகில் உள்ள மான் தொட்டிகளுக்கு நீர் நிரப்பும் பணி நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி உத்தரவின் படி சரக அலுவலர் மகேந்திரன் அறிவுரைப்படி கல்லாவி பிரிவு நொச்சிப்பட்டி காப்பு காட்டில் கடுமையான வறட்சியின் காரணத்தினால் வன உயிரி னங்கள் நீரின்றி தவித்து வரும் சூழ்நிலையை கருதி வன உயிரினங்கள் நீர் அருந்தும் வகையில் 2 மான் தொட் டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்றது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட தொட்டி மற்றும் 6 ஆயிரம் லிட்டர் அளவு கொண்ட கொண்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப் பட்டு வன உயிரினங்கள் நீர் அருந்தும் வண்ணமாக நீர் நிரப்பும் பணி நடைபெற்றது.
Next Story






