என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.
    • ஊராட்சி செயலர்கள் ஷாலினி, மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல் பெரமகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ முருகர் கோவில் அருகில் இருந்து கால்நடை மருத்துவமனை வரை 850 மீட்டர் தொலைவு ஒரடுக்கு தார் சாலை அமைக்க ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி காமாட்சிப்பட்டி பகுதியில் மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7. லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், திமுக ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு ) வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி ( வ.ஊ), முருகன் (கி.ஊ), வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஈ.பியாரோஜான், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், கிருஷ்ணகிரி, தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பனைபொருள் சம்மேளனத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் மணிவண்ணன், வலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சபிதா சேட்டு, கொடமாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் வீரமணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, இளைஞர் பாசறை பாண்டியன், ஊராட்சி செயலர்கள் ஷாலினி, மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலை மற்றும் இலக்கியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
    • பரிசு காசோலை கொடுத்து பாராட்டி வாழ்த்தினர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப்பேரவை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கலை மற்றும் இலக்கியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் பேச்சுபோட்டியில் பாவக்கல் அரசுப்பள்ளியை சார்ந்த 10-ம் வகுப்பு மாணவி சங்கீதா, கவிதைப்போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி பவித்ரா ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.

    மேலும் கவிதைப்போட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடம் பெற்றார். மாணவிகளை பாராட்டும் வகையில் இன்று பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன், உதவி தலைமை ஆசிரியர் அவுத்தர் பாஷா மாணவிகளுக்கு முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பெற்ற சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு காசோலை கொடுத்து பாராட்டி வாழ்த்தினர். மேலும் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சந்திரசேகர், சம்பூர்ணம், தமிழ்ச்செல்வி மற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். உடன் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • தரம், விலை குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில்,தாலூக்கா அலுவலக சாலையில் உள்ள உழவர் சந்தையில், விவசாயிகள் வியாபாரிகள் பயனடையும் வகையில்

    இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதனை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கிவைத்தார். இதில் சுமார் 600 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பின்னர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உழவர் சந்தையில் காய்கறிகளின் தரம், விலை குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மேலும் இதில், மாமன்ற உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், பகுதி செயலாளர் ராமு, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார்,மற்றும் பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.

    • பெண்கள் தங்களின் புகார்களை எழுத்து மூலமாக அளிக்கலாம்.
    • ஒரு தன்னார்வலர் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் பொதுமக்கள் இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பலவேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 348 மனுக்களை கொடுத்தனர்.

    அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் பணிபுரிய கூடிய இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகத்தை கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு பெட்டகம் அறிமுகம ்செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் வைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் தங்களின் புகார்களை எழுத்து மூலமாக அளிக்கலாம்.

    சி.சி.டி.வி. கேமரா இல்லாத இடங்களில் இந்த பெட்டகம் வைக்க வேண்டும். இந்த பெட்டகத்தில் புகார்கள் பெறப்படும போது நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழுவின் உறுப்பினர், குழுவில் இடம் பெற்றுள்ள வெளி நபரான ஒரு தன்னார்வலர் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட வேண்டும்.

    இதில் வரும் புகார்களுக்கு பதிவேடு பராமரித்து அது குறித்த விவரத்தை காலமுறை அறிக்கையாக மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளூர் புகார் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    • பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • 10 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் செவுளூர் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 11-ந்தேதியன்று தனது கணவரை அழைத்துக்கொண்டு ஓசூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ சிகிச்சைக்காக அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து நேற்று வீடு திரும்பிய கலைவாணி கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலைவாணி காவேரிப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து ரூ.3.50 லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார். 

    • பெண் உள்பட 4 பேரை போலீசார் மடக்கினர்.
    • வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள பாம்பாறு அணை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.

    போலீசார் அருகில் வருவதை கண்டவுடன் காரில் இருந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. ஒருவர் மட்டும் தப்பிவிட்ட நிலையில் மீதமிருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து காரை போலீசார் சோதனையிட்டபோது கியாஸ் சிலிண்டர்,வெல்டிங் கருவி, இரும்புக்கம்பிகள், அலுமினிய ஏணி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட 4 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர்.

    அப்போது ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் விபரம் வருமாறு:-

    பெங்களூருவை சேர்ந்த ரவிபண்டாரி (வயது 38),நேபாளத்தை சேர்ந்த தேவராஜ் (40),ஜேக்கப் (42),பூனம் (37).இவர்களை கைது செய்த ஊத்தங்கரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் தப்பி ஓடிய பெங்களூருவை சேர்ந்த அமீர்பாபா (40) என்பவரை தேடி வருகின்றனர். வங்கி கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளைக்கும்பல் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கிணற்றில் குதித்த மனோஜ்குமார் நீண்ட நேரம் வெளியே வராததால் நண்பர்கள் அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.
    • .நீண்ட நேரம் தேடி மனோஜ்குமார் உடலை கரைக்கு கொண்டு கொண்டுவந்த போது சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கண்ணசந்திரம் கிராமத்தை சேர்ந்த அப்போஜிராவ் எனபவரின் மகன் மனோஜ் குமார். இவர் உத்தனப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மனோஜ்குமார் நண்பருடன் சேர்ந்து குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குதித்த மனோஜ்குமார் நீண்ட நேரம் வெளியே வராததால் நண்பர்கள் அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மனோஜ்குமார் கிணற்றில் மூழ்கி இருப்பதை கண்டு உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சிறுவனை மீட்க ராயக்கோட்டையில் இருந்து தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.

    அங்கு வந்த மீட்பு குழுவினர் நீண்ட நேரம் மனோஜ்குமார் உடலை கிணற்றில் தேடினர்.நீண்ட நேரம் தேடி மனோஜ்குமார் உடலை கரைக்கு கொண்டு கொண்டுவந்த போது சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய உத்தனப்பள்ளி போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இன்று காலை, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இது குறித்து அறிந்த , ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்-முத்தாலி சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில், மாணவர்கள் சென்று வர காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும் அதனால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி இன்று காலை, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம், சுமார் அரைமணி நேரம் நீடித்தது. இது குறித்து அறிந்த , ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 8 மாதங்களாக 14 மாநிலங்களைச் சுற்றி கொண்டு தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.
    • தினமும் 40 கிலோ மீட்டர் நடந்து செல்லும் இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகார் பாட்னாவில் மீண்டும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கையில் இந்திய தேசிய கொடியுடன் ஒரு முதியவர் வேகமாக நடந்து கொண்டு சென்றிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் சிலர் இவரை கண்டு கையில் தேசிய கொடியுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது பொதுமக்களுக்கு மிகப்பெரிய வியப்பு ஏற்படுத்தும் செய்தியை கூறினார் அந்த முதியவர்.

    கையில் தேசிய கொடியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் உலக மக்கள் அமைதிக்காகவும், இந்தியா முழுவதும் 28 மாநிலங்களையும் நடை பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு செய்வது வருவதாகக் கூறினார்.

    மேலும் ஜனவரி 26-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து புறப்பட்ட இவர் கடந்த 8 மாதங்களாக 14 மாநிலங்களைச் சுற்றி கொண்டு தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.

    மேலும் தினமும் 40 கிலோ மீட்டர் நடந்து செல்லும் இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகார் பாட்னாவில் மீண்டும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இந்த செய்தியை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை வெகுவாக பாராட்டி பொன்னாடை போர்த்தி ஊக்குவித்தனர்.

    மேலும் தேவையான உணவு மற்றும் பழங்களை கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    67 வயது முதியவரான ஒருவர் உலக மக்கள் அமைதிக்காகவும் இளைஞர்களை நல்வழி படுத்தவும் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவரை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அரிமா சங்க தலைவராக தொழில் அதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான முகமது ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
    • தொழிலதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான அப்துல் ரஹ்மான் செயலாளராகவும், பொற்செழியன் துணை செயலாளராகவும், வெங்கடேஷ் பொருளாலராகவும் பதிவேற்றுக் கொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரிமா சங்க வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு , அறிமுக விழா நடைபெற்றது. 2022 - 2023 ஆண்டு தேன்கனிக்கோட்டை அரிமா சங்க தலைவராக தொழில் அதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான முகமது ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.

    மேலும் தொழிலதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான அப்துல் ரஹ்மான் செயலாளராகவும், பொற்செழியன் துணை செயலாளராகவும், வெங்கடேஷ் பொருளாலராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் பன்னாட்டுதலைவர் தனபால், மாவட்ட 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, வட்டார தலைவர் அண்னைய்யா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து அறிமுகபடுத்தி சிறப்புரையாற்றினர்.

    இதில் தேன்கனிகோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னால் பேருராட்சி தலைவர் நாகேஷ், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் அன்வர், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அரிமா சங்க தலைவர் முஹமது ஷெரிப் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் தேன்கனிகோட்டை அரிமா சங்கம் மூலம் மரக்கன்றுகள் நடுதல், மருத்துவமுகாம், ரத்ததான முகாம் நடத்துதல், பள்ளி படிப்பு தொடர முடியாத குழந்தைகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல நலதிட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதி யளித்தார்.

    • பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், பர்கூர் நகர், ஒப்பதவாடி, காரகுப்பம், கந்திகுப்பம், கப்பல்வாடி, வீரமலை குண்டா, சின்னமட்டாரபள்ளி, நேரல குட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல் வாடி, அங்கிநாயனப்பள்ளி, எலத்த கிரி, வரட்டனப் பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில், மகாராஜ கடை, தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், பாகிமானூர், ஜெகதேவி, சிப்காட், அச்சமங்கலம், ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, கண்ணடஹள்ளி, அத்திகானூர், கோட்டூர், சந்தூர், வேடர்தட்டக்கல், வெப்பாலம்பட்டி பட்டகப்பட்டி, தொப்படிகுப்பம், கங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, ஜிஞ்சம்பட்டி, நடுபட்டு, ஒலா, பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பதி, சிப்காட், கல்லாவி, ஆனந்தூர் திருவனப்பட்டி, கெரிகேபள்ளி, சந்திரப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • மாந்தோப்பில் உள்ள குடிசையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் கட்டிலில் படுத்திருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக குடிசை தீப்பற்றியதில் செல்வம் உயிரிழந்தார்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள அங்கினாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (52). இவருடைய 2மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வெல்டிங் தொழில் செய்து வந்தார்.

    அங்கினாம்பட்டியை கிராமத்தில் அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள குடிசையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் கட்டிலில் படுத்திருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக குடிசை தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் செல்வம் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி வருகிறார். 

    ×