என் மலர்
நீங்கள் தேடியது "அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு"
- அரிமா சங்க தலைவராக தொழில் அதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான முகமது ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
- தொழிலதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான அப்துல் ரஹ்மான் செயலாளராகவும், பொற்செழியன் துணை செயலாளராகவும், வெங்கடேஷ் பொருளாலராகவும் பதிவேற்றுக் கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரிமா சங்க வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டம் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு , அறிமுக விழா நடைபெற்றது. 2022 - 2023 ஆண்டு தேன்கனிக்கோட்டை அரிமா சங்க தலைவராக தொழில் அதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான முகமது ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார்.
மேலும் தொழிலதிபரும் தேன்கனிகோட்டை பேரூராட்சி கவுன்சிலருமான அப்துல் ரஹ்மான் செயலாளராகவும், பொற்செழியன் துணை செயலாளராகவும், வெங்கடேஷ் பொருளாலராகவும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க முன்னாள் பன்னாட்டுதலைவர் தனபால், மாவட்ட 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, வட்டார தலைவர் அண்னைய்யா ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து அறிமுகபடுத்தி சிறப்புரையாற்றினர்.
இதில் தேன்கனிகோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், முன்னால் பேருராட்சி தலைவர் நாகேஷ், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் அன்வர், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அரிமா சங்க தலைவர் முஹமது ஷெரிப் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் தேன்கனிகோட்டை அரிமா சங்கம் மூலம் மரக்கன்றுகள் நடுதல், மருத்துவமுகாம், ரத்ததான முகாம் நடத்துதல், பள்ளி படிப்பு தொடர முடியாத குழந்தைகளுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட பல நலதிட்டங்களை நிறைவேற்றுவதாக உறுதி யளித்தார்.






