என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதானவர்களை படத்தில் காணலாம்.
கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு வங்கி கொள்ளைக்கு திட்டமிட்டிருந்த பெண் உள்பட 4 பேர் கைது
- பெண் உள்பட 4 பேரை போலீசார் மடக்கினர்.
- வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள பாம்பாறு அணை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது.
போலீசார் அருகில் வருவதை கண்டவுடன் காரில் இருந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. ஒருவர் மட்டும் தப்பிவிட்ட நிலையில் மீதமிருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதையடுத்து காரை போலீசார் சோதனையிட்டபோது கியாஸ் சிலிண்டர்,வெல்டிங் கருவி, இரும்புக்கம்பிகள், அலுமினிய ஏணி உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட 4 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று உரிய முறையில் விசாரித்தனர்.
அப்போது ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் விபரம் வருமாறு:-
பெங்களூருவை சேர்ந்த ரவிபண்டாரி (வயது 38),நேபாளத்தை சேர்ந்த தேவராஜ் (40),ஜேக்கப் (42),பூனம் (37).இவர்களை கைது செய்த ஊத்தங்கரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் தப்பி ஓடிய பெங்களூருவை சேர்ந்த அமீர்பாபா (40) என்பவரை தேடி வருகின்றனர். வங்கி கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளைக்கும்பல் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






