என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • பெருமாள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது30). இவர் கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது இவருக்கும் அந்த பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த 15 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார். அங்கு பெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த சிறுமி தனது தந்தையிடம் அழுது கூறினார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் அதிகரிப்பால் பள்ளி செல்லும் மாணவர்கள், தொழிற்சாலை, கடைவீதிகளுக்கு செல்லும் பொது மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.
    • இந்த பிரச்சனையை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தெரு நாய்கள் தொல்லையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி பகுதியான சூளகிரிபேருந்து நிலையம், சூளகிரி -பேரிகை சாலை , சூளகிரி -கிருஷ்ணகிரிசாலை, சூளகிரி- உத்தனப்பள்ளி சாலை, கீழ் தெரு, கோட்டை தெரு, மற்றும் பல்வேறு முக்கிய மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகள் உள்ளது.

    இந்த பகுதிகளில் சமீப காலமாக தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய்கள் அதிகரிப்பால் பள்ளி செல்லும் மாணவர்கள், தொழிற்சாலை, கடைவீதிகளுக்கு செல்லும் பொது மக்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

    இந்த பிரச்சனையை அதிகாரிகளிடம் தெரிவித்தும் தெரு நாய்கள் தொல்லையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    • 1 மணிநேரம் போராடி விரட்டினர்.
    • பாம்பை பார்க் காமல் இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி-ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை பிரிவு சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நல்லாரன் பள்ளியை சேர்ந்த கோவிந்தப்பா (வயது 55) என்ற கொத்தமல்லி கீரை வியாரி தனது இருசக்கரவாகனத்தை சாலை ஒரமாக நிறுத்திவிட்டு வியாபார விஷயமாக மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

    தீடீர் என அந்த வழியாக வந்த 3 அடி நீளம் இருந்த விஷ பாம்பு கோவிந்தப்பாவின் வாகனத்தில் நுழைந்தது. இ தைப் பார்த்த கோவிந்தப்பா மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்பு 1 மணி நேரம் போராடி அந்த பாம்பை விரட்டினர். பாம்பை பார்க் காமல் இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கும்.

    பொதுவாக மரம், செடிகள், குப்பைகள் நிறைந்த பகுதிகளில் மட்டுமல்ல பரபரப்பான சாலைகளில் கூட வாகனத்தை ஜாக்கிரதையாக விட வேண்டும் என இந்த சம்பவம் உணர்த்துகிறது.

    • விளம்பர தட்டிகளை அதிக அளவு இரும்பு சட்டங்கள், மர சட்டங்களில் ஒட்டி தெருவீதிகள், சாலை ஓரங்கள் முக்கிய பகுதிகளில் வைத்து வரும் மோகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
    • அதிவேக காற்றினால் இவை சாய்வதும், முறிந்து விழுவதும் அதிகரித்து வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் திருமணம், பிறந்தநாள், கடை திறப்பு, பதவிஏற்பு என விளம்பர தட்டிகளை அதிக அளவு இரும்பு சட்டங்கள், மர சட்டங்களில் ஒட்டி தெருவீதிகள், சாலை ஓரங்கள் முக்கிய பகுதிகளில் வைத்து வரும் மோகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

    அதிவேக காற்றினால் இவை சாய்வதும், முறிந்து விழுவதும் அதிகரித்து வருகிறது.

    ஒரு நாள் கொண்டாட்டம் என வைக்கப்படும் விளம்பர தட்டிகளை நாள் கணக்கில் ஆகியும் அகற்றுவதில்லை.

    இதை அதிகாரிகள் கட்டுபடுத்தவும், விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    • பசுமையான ஊராட்சியை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
    • சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" இயக்க விழிப்புணர்வு பேரணி மற்றும் சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கடந்த 20ந் தேதி முதல் வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை "நம்ம ஊரு சூப்பரு" இயக்கம் சார்பாக பொது நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் ஒட்டு மொத்த சுத்தம் செய்தல், குடிநீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடியிருப்பு மற்றும் நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் கழிவுகளை தடை செய்தல் மற்றும் துணிப்பைகளை பயன்படுத்துதல், தூய்மை மற்றும் பசுமையான ஊராட்சியை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பிரசார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

    பொதுமக்களிடையே பாதுகாப்பான சுகாதாரத்தையும், அவர்களுடைய வாழ்வா தாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.

    திட மற்றும் திரவ கழிவினை முறையாக தரம் பிரித்து, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, அதற்கு மாற்றாக பயன்படுத்தக் கூடிய துணி பைகள் பயன்பாடுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை தவிர்ப்பதன் மூலம் சுற்றுப்புறத்தினை பசுமைகயாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க பொதுமக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நம்ம ஊரு சூப்பரு இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

    அதன்படி, ஊராட்சி களில் குப்பைகள் அதிகம் உள்ள இடங்களை தூய்மைப்பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பெருவாரியான தூய்மைப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சந்தானம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, வேடியப்பன், தாசில்தார் நீலமேகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுசித்ரா, ஒன்றிய குழு தலைவர் அம்சா ராஜன், ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

    • வீட்டுக்கு போதையில் சென்ற திருப்பதியை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
    • வீட்டிலிருந்து வெளியேறிய திருப்பதி விஷம் வாங்கி கொண்டு அதே தாபா ஓட்டலுக்கு சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரியை அடுத்துள்ள டி.கொல்லுப்பட்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் திருப்பதி (வயது 30). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் தனது மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

    குடிப்பழக்கம் உள்ள திருப்பதி கிருஷ்ணகிரி-தருமபுரி சாலையில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில் தினசரி மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு சென்று ரகளையில் ஈடுபடுவாராம்.

    நேற்று இதே போல வீட்டுக்கு போதையில் சென்ற திருப்பதியை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் வீட்டிலிருந்து வெளியேறிய திருப்பதி விஷம் வாங்கி கொண்டு அதே தாபா ஓட்டலுக்கு சென்று மது வாங்கி அதில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
    • ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 16-வது வார்டுக்குட்பட்ட அரசனட்டி பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.

    இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தனர்.

    இதில் துணைமேயர் ஆனந்தய்யா, மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மண்டல தலைவர்கள் காந்திமதி கண்ணன், ரவி, மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பாலத்தின் அடியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார்.
    • பிணமாக கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விபரமும் தெரியவில்லை.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அடுத்துள்ள ராமகிருஷ்ணபதி பகுதியில் 5 கண் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக ெசன்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சாமல்பட்டி போலீசாருக்கும், சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். பாலத்தின் அடியில் பிணமாக கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரெயில்ேவ போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்த ஆண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எந்த விபரமும் தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு நிலையம் எதிரில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தீபக் அரவிந்த் தவறி விழுந்தார்.
    • இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பர்கூர்,

    சேலம் மாவட்டம், மேட்டூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தீபக்அரவிந்த் (வயது22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் நேற்றிரவு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் வந்த போது தீயணைப்பு நிலையம் எதிரில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தீபக் அரவிந்த் தவறி விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்.
    • பவள விழா சலுகை 3 சதவீதம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், திட்ட கிளை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். கிளை துணை செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் தொடக்க உரையாற்றினார். கிளை செயலாளர் முனிரத்தினம், கிளை பொருளாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மண்டல செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கிளை இணை செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். பவள விழா சலுகை 3 சதவீதம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2003-க்கு முன் மற்றும் பின் பணியில் சேர்ந்தவர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மறு பரிசீலனை செய்து, காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும். பஞ்சப்படி நிலுவை தொகை 2020-ல் இருந்து வழங்க வேண்டும். விதவை, விவாகரத்து, ஊனமுற்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    • இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.நடந்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது .
    • கண்டக்டர் சக்திவேல் மற்றும் பஸ்ஸின் டிரைவர் மாதேஸ் ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (55). மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி வாணிஸ்ரீ(50) மற்றும் மூளை வளர்ச்சியற்ற, நடக்க இயலாத மகன் ஹரிபிரசாத்(16) ஆகியோருடன் அரசு பஸ்சில் கடந்த திங்கள்கிழமை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றார்.

    பஸ்சில் ஏறியபோது கண்டக்டரிடம் கலெக்டர் அலுவலகத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். கண்டக்டரும் சரி என்று கூறி பஸ்ஸில் ஏற்றிக்கொண்டுள்ளார். ஆனால் கிருஷ்ணகிரியை நெருங்கியதும், பஸ் கண்டக்டர் இந்த பஸ் கலெக்டர் அலுவலகம் செல்லாது, கீழே இறங்குங்கள் எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.

    இதனால் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.கண்டக்டரிடம் தான் ஏறும்போதே கலெக்டர் அலுவலகத்தில் இறக்கிவிட சொல்லி கேட்டுத்தானே பஸ்ஸில் ஏறினேன் என்று நியாயம் கேட்டார். ஆனால் கண்டக்டர் அதை காதில் போட்டுக்கொள்ள வில்லை. வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.

    இதையடுத்து 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்த செய்தி புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது.

    இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.நடந்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது .

    இதையடுத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தாரிடம் கடுமையான முறையில் நடந்து கொண்ட கண்டக்டர் சக்திவேல் மற்றும் பஸ்ஸின் டிரைவர் மாதேஸ் ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் மாற்றுத்திறனாளி கோபாலகிருஷ்ணன் இந்த சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்று 2 பேரையும் மன்னிக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டு ள்ளாராம். அவருக்கு உள்ள கருணை கூட பஸ் ஊழியர்களுக்கு இல்லாதது வேதனைதான்.

    • கடைகளில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தங்கள் இனத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
    • இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள பன்னியாண்டி இன மக்களை ஒன்றுதிரட்டி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பன்றி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது என்றும், பன்றி வளர்ப்பு கொட்டகைகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்றும் ஓசூர் மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட பன்னியாண்டி சமூக நல சங்கத்தினர் ஓசூர் மாநகராட்சி அலுவலரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில்பன்றி வளர்ப்பில் ஈடுபடக்கூடாது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மாநகராட்சிக்குட்பட்ட கடைகளில் பன்றி இறைச்சி விற்பனை செய்ய தங்கள் இனத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் மாவட்டம் முழுவதும் உள்ள பன்னியாண்டி இன மக்களை ஒன்றுதிரட்டி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×