என் மலர்
நீங்கள் தேடியது "பர்கூரில் விபத்து"
- தீயணைப்பு நிலையம் எதிரில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தீபக் அரவிந்த் தவறி விழுந்தார்.
- இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பர்கூர்,
சேலம் மாவட்டம், மேட்டூர் ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் தீபக்அரவிந்த் (வயது22). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் நேற்றிரவு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியில் வந்த போது தீயணைப்பு நிலையம் எதிரில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தீபக் அரவிந்த் தவறி விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






