என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் வலியுறுத்தல்"

    • மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும்.
    • பவள விழா சலுகை 3 சதவீதம் வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மின்வாரிய அலுவலக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில், திட்ட கிளை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கோரிக்கை களை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். கிளை துணை செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் தொடக்க உரையாற்றினார். கிளை செயலாளர் முனிரத்தினம், கிளை பொருளாளர் சந்திரன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். மண்டல செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். கிளை இணை செயலாளர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மின்துறை பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். பவள விழா சலுகை 3 சதவீதம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 2003-க்கு முன் மற்றும் பின் பணியில் சேர்ந்தவர்களின் ஒப்பந்த பணிக்காலத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மறு பரிசீலனை செய்து, காசில்லா மருத்துவம் வழங்க வேண்டும். பஞ்சப்படி நிலுவை தொகை 2020-ல் இருந்து வழங்க வேண்டும். விதவை, விவாகரத்து, ஊனமுற்றோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    ×