என் மலர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளியின் பெருந்தன்மை"
- இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.நடந்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது .
- கண்டக்டர் சக்திவேல் மற்றும் பஸ்ஸின் டிரைவர் மாதேஸ் ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (55). மாற்றுத்திறனாளியான இவர் தனது மனைவி வாணிஸ்ரீ(50) மற்றும் மூளை வளர்ச்சியற்ற, நடக்க இயலாத மகன் ஹரிபிரசாத்(16) ஆகியோருடன் அரசு பஸ்சில் கடந்த திங்கள்கிழமை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக சென்றார்.
பஸ்சில் ஏறியபோது கண்டக்டரிடம் கலெக்டர் அலுவலகத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளார். கண்டக்டரும் சரி என்று கூறி பஸ்ஸில் ஏற்றிக்கொண்டுள்ளார். ஆனால் கிருஷ்ணகிரியை நெருங்கியதும், பஸ் கண்டக்டர் இந்த பஸ் கலெக்டர் அலுவலகம் செல்லாது, கீழே இறங்குங்கள் எனக்கூறி நடுவழியில் இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார்.கண்டக்டரிடம் தான் ஏறும்போதே கலெக்டர் அலுவலகத்தில் இறக்கிவிட சொல்லி கேட்டுத்தானே பஸ்ஸில் ஏறினேன் என்று நியாயம் கேட்டார். ஆனால் கண்டக்டர் அதை காதில் போட்டுக்கொள்ள வில்லை. வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கமுடியாமல் ஒன்றரை கி.மீ., தூரம் தூக்கி வந்து கோபாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். இது குறித்த செய்தி புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது.
இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.நடந்த சம்பவம் உண்மை என்பது தெரிய வந்தது .
இதையடுத்து மாற்றுத்திறனாளி குடும்பத்தாரிடம் கடுமையான முறையில் நடந்து கொண்ட கண்டக்டர் சக்திவேல் மற்றும் பஸ்ஸின் டிரைவர் மாதேஸ் ஆகியோரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி கோபாலகிருஷ்ணன் இந்த சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் பெற்று 2 பேரையும் மன்னிக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டு ள்ளாராம். அவருக்கு உள்ள கருணை கூட பஸ் ஊழியர்களுக்கு இல்லாதது வேதனைதான்.






