என் மலர்
கிருஷ்ணகிரி
- ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, தொழிலாளர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
ஓசூர்,
தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் மாநில சங்கத்தின் சார்பில், அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் களுக்கு,தமிழக அரசு வழங்கும் ஓய்வூதியத்திற்கான ஆணை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, தொழிலாளர் களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூர் காமராஜர் காலனியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக அமைப்புசாரா உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினரும்,தொழிற்சங்க மாநிலத்தலைவருமான வக்கீல் இளஞ்சூரியன் கலந்து கொண்டு, தொழிலாளர் களுக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், விசைத்தறிப்பிரிவு மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளர் மனோகரன், மாவட்ட மகளிரணி தலைவி சத்யா, மாநில சட்ட பாதுகாப்பு குழு துணைத்தலைவி வக்கீல் வனதாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அலுவலக நிர்வாகிகள் வினோதினி, ரக்க்ஷன் ஆகியோர் செய்து இருந்தனர்.
- அக்குழவி கூட்டில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்குழவிகள் இருந்துள்ளன.
- தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து அழித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.
இக்கிராமத்தில் தருமன் என்பவரது வீட்டின் முன்பு உள்ள புங்கன் மரத்தில் சுமார் 1 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத செங்குழவி கூடு அமைத்துள்ளது. அக்குழவி கூட்டில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்குழவிகள் இருந்துள்ளன.
புங்கன் மரத்தடியில் குழந்தைகள் விளையாடுவதாலும், ஊரின் மூத்த குடிமக்கள் மரத்தடியில் அமர்வதாலும் அவர்களை செங்குழவி தாக்க வாய்ப்புள்ளதால், செங்குழவி கூட்டின் ஆபத்தை உணர்ந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் ரங்கநாதனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து ஊராட்சி தலைவர் ரங்கநாதன் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் அவர்களிடம் செங்குழவி கூட்டை அழித்துக்கொடுக்க மனு அளித்தார்.
இதையடுத்து இரவு நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவித்துவிட்டு, தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டை கலைத்து அழித்தனர்.
மிகப்பெரிய ராட்ச செங்குழவி கூடு அழிக்கப்பட்டதால் ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
- தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர்.
- விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி பகுதிகளில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
போச்சம்பள்ளி உள்ள அகரம், வேலம்பட்டி, பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு கத்திரிக்காய், மற்றும் முள்ளுக்கத்திரிகாய் உள்ளிட்ட பல ரக கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளனர்.
கத்திரிக்காய் நடவு செய்து 40 நாட்களில் அறுவடைக்கு வரும், அடுத்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் உள்ளூர் வாரச்சந்தைகள், மற்றும் வெளி மாவட்டத்திற்கு அனுப்ப படுகிறது.
நடப்பாண்டில் நடவு செய்யப்பட்ட கத்தரிக்காய் நாற்றுகளில், காய்கள் சாகுபடிக்கு வந்துள்ளது. தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் பலனில்லை. ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகளுக்கு மேல் கத்தரிக்காய் கிடைக்க வேண்டும்.
ஆனால் தற்போது மகசூல் சரிபாதியாக குறைந்துள்ளது. எனவே புழுக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- இவருக்கு, முன்னாள் தமிழக அமைச்சர் வைகை செல்வன் சான்றிதழும், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.
- கணிதத்துறை மாணவி ராமலட்சுமி, 3-வது இடம் பெற்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும், ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளைச் செயலமைப்பும் இணைந்து கட்டுரைபோட்டி நடத்தின.
இப்போட்டியில், தமிழர் பதித்த தடங்கள் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில், ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவி ராமலட்சுமி, 3-வது இடம் பெற்றார்.
இவருக்கு, முன்னாள் தமிழக அமைச்சர் வைகை செல்வன் சான்றிதழும், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.
மேலும் இந்த மாணவியை, ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி மற்றும் தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
- ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
- இது ஒரு இலவச பணி ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை(26-ந் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: -
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இம்மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையான நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது ஒரு இலவச பணி ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இதில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.
- நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
- சீனிவாசன் ( வயது 40 ) என்ற அந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5,500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் டவுன் போலீசார் பஸ் நிலைய பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் ( வயது 40 ) என்ற அந்த ஆசாமியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.5,500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து மற்றும் கருஞ்சாந்து ஓவியங்களைக் காட்டி நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
- இம்மலையில் மொத்தம் 8 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. அதில் 4 இடங்கள் காட்டப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 15 நாட்கள் தொல்லியல் பயிலரங்கம் நடந்து வருகிறது. இதில் தமிழ்த்துறை முதுகலை 2-ம் ஆண்டு பயிலும் 32 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பா ட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணை ப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆய்வாளர்கள் சதானந்த கிருஷ்ணகுமார், வரலாறு ஆசிரியர் ரவி, சரவணகுமார், மாருதி மனோகர் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
இப்பயிற்சியின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் உள்ள தாளாப்பள்ளி மலையில் காணப்படும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து மற்றும் கருஞ்சாந்து ஓவியங்களைக் காட்டி நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
இம்மலையில் மொத்தம் 8 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. அதில் 4 இடங்கள் காட்டப்பட்டன. இப்பயிற்சியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, இன்று வரையிலான வரலாற்றை எழுதத் தேவையான முதன்மை சான்றுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இப்பயிற்சியினை அருங்காட்சியகப் பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக மலர் விற்பனை பாதிக்கப்பட்டது.
- வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் வருவாய் இழப்பை சந்தித்தனர்.
ஓசூர்,
ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம், பாகலூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் இதமான தட்பவெட்பநிலை மற்றும் வளமான மண்வளம் காரணமாக ரோஜா, பட்டன்ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு மல்லி, சம்பங்கி மற்றும் அலங்காரப்பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட 30 வகையான மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் வாசமுள்ள மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தை களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்தும், திறந்த வெளியில் சொட்டுநீர் பாசன முறையிலும் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக மலர் விற்பனை பாதிக்கப்பட்டது.
நடப் பாண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படவுள்ளதால், மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், நேற்று (24-ந் தேதி) பிரதோஷம், நாளை (26-ந் தேதி) அமாவாசை என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனையான குண்டு மல்லி தற்போது ரூ.600 முதல் ரூ.900 வரை விலை உயர்ந்துள்ளது. கரோனா இன்றி விழா
இதுதொடர்பாக ஓசூர் மலர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக இங்கு விளையும் மலர்களை சென்னை உள்ளிட்ட தமிழக நகரப் பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் வருவாய் இழப்பை சந்தித்தனர்.
இதேபோல, மற்ற பூக்களில் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விவரம் (அடைப்புக் குறியில் கடந்த வார விலை):
முல்லை ரூ.500 (ரூ.250) சம்பங்கி ரூ.40 (ரூ.20) சாமந்தி ரூ.160 (70), பட்டன் ரோஜா ரூ.140 (60) கனகாம்பரம் ரூ.800 (ரூ.400) என அனைத்து மலர்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு பூக்களின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், வரும் நாட்களில் விலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பிடிபட்ட சிவா (வயது 31),பாபு(32),முரளி(31),கார்த்திகேயன்(31) ஆகிய 4 போரையும் கைது செய்தனர்.
- போலீசார் அவர்களிடமிருந்து ரூ.13,700 பணம், 3 மோட்டார்சைக்கிள்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
ஓசூர் ஹட்கோ போலீசார் பெத்த கொள்ளு ஏரி பகுதி வழியாக ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கும்பல் சூதாடிக்கொண்டிருந்தது. போலீசாரை கண்டவுடன் அந்த கும்பல் தப்பி ஓடிஏ முயன்றது. இதில் 4 பேரை போலீசார் மடக்கினர். 3 பேர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
பிடிபட்ட சிவா (வயது 31),பாபு(32),முரளி(31),கார்த்திகேயன்(31) ஆகிய 4 போரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.13,700 பணம், 3 மோட்டார்சைக்கிள்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஆனந்த்,சந்திரன், முனியப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
- ஏரியில் நீர் குறைந்து வரும் நிலையில், ஏரியிலுள்ள அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கனரக பொக்லைன் எந்திரத்தை வைத்து ஏரியின் நடுவில் நீண்ட கரை அமைத்து வருகிறார்.
- அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புதியதாக உருவாக்கப்பட்ட கரையை அகற்ற உத்தரவிட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வலசைகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட ஜிம்மாண்டியூர் ஏரி சுமார் 28 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஏரி கடந்த வடகிழக்கு மற்றும் பருவ மழையால் நிரம்பியது. இதனை அடுத்து ஊர் முக்கியஸ்ர்கள் முன்னிலையில் மீன்பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.
விக்கினம்பட்டி கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்பவர் ஒரு வருடத்திற்கான மீன் குத்தகை ரூ.68,000-த்திற்கு ஏலம் எடுத்தார்.
ஏரியில் நீர் குறைந்து வரும் நிலையில், ஏரியிலுள்ள அனைத்து மீன்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கனரக பொக்லைன் எந்திரத்தை வைத்து ஏரியின் நடுவில் நீண்ட கரை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு சென்ற விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர்கள், புதிய கரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புதியதாக உருவாக்கப்பட்ட கரையை அகற்ற உத்தரவிட்டனர்.
அனுமதி பெறாமல் ஏரிக்குள் கனரக பொக்லைன் எந்திர உதவியுடன் ஏரியின் நடுவில் கரை கட்டிய மின் பிடி குத்தகைதாரர் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
- கடந்த 5 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
- ஏழு கிராமங்கள் தாண்டி அந்த எருமை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு வரவேண்டும், இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார்.
மத்தூர்,
இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன.
இக்கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதனை கண்டறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் மத்தூர் அருகே உள்ள சாமியாரிடம் வாக்கு கேட்டுள்ளனர். கிராமத்தினுள் காத்து கருப்பு நுழைந்திருப்பதாக சாமியார் கூறியதை கேட்டதும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்கு பரிகாரமாக எருமை கன்று குட்டிக்கு நவதானிய மாலைகள் அணிவித்து ஊரை சுற்றி மூன்று முறை வலம் வந்து பின்னர் ஏழு கிராமங்கள் தாண்டி அந்த எருமை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு வரவேண்டும்,
இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார். இதனை நம்பி கிராம மக்கள் ஒன்று ஒன்றிணைந்து எருமை கன்று குட்டிக்கு நவதானிய மாலைகள் அணிவித்து கிராமத்தை மூன்று முறை வலம் வந்து ஏழு கிராமங்கள் தாண்டி கன்று குட்டியை விடுவித்தனர்.
கிராமத்தில் உள்ள அனைவரும் இந் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறிய நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நிகழ்வை செய்து முடித்தனர்.
- ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டி போட்டிகள் நேற்று நடைபெற்றது.
- 500 பேர் கலந்துகொண்டனர்கள்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சரக அளவிலான விளையாட்டி போட்டிகள் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் சூளகிரி சரக அளவில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 500 பேர் கலந்துகொண்டனர்கள். பள்ளி நிறுவனர் வி.எம்.அன்பரசன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கி மாணவர்களை ஊக்கபடுத்தினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு போட்டி சூளகிரி சரக செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, சரக இணைசெயலாளர் செந்தில்குமார், கோவிந் அரசு மற்றும் தனியார் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ்குமார் செய்து இருந்தார்.






