என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • போச்சம்பள்ளி வாரசந்தை மூலம் வருவாய் கிடைக்கும் நிலையில், அங்கு போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
    • தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் வறண்டு காட்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்று நீரை மின்மோட்டார் மூலம் ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். தற்போது ஒரு புல் கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதனால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாடுகளை அடி மாட்டுக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, மானியத்தில் உலர் தீவனங்கள் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க அனுமதிக் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மண்பாண்ட தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி வாரசந்தை மூலம் வருவாய் கிடைக்கும் நிலையில், அங்கு போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    அரசு பாக்கு செடிகளை மானியத்தில் வழங்க வேண்டும். தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தியும் இதுவரை இத்திட்டத்தில் பலருக்கு இணைப்புகள் வழங்கப்படவில்லை. 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    மானியத்தில் உலர்தீ வனம் கோடைக்காலத்தில் மட்டுமே வழங்கப்படும். மண் பாண்ட தொழிலா ளர்கள் ஏரியில் இருந்து மண் எடுக்க 31 பேர் மனு அளித்துள்ளனர். பரிசீலனையில் உள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலம் ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.400 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. கூடுதலாக டிராக்டர்கள் பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தென்னையில் நீராபானம் எடுப்பது தொடர்பாக எலுமிச்சகிரி வேளாண் அறிவியல் மையத்தில் பயற்சி அளிக்கப்படுகிறது. திம்மாபுரம் தோட்டக்க லைத்துறை பண்ணையில் விவசாயிகள் பாக்கு செடிகளை விலை கொடுத்து கொள்முதல் செய்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் பயிர்கள், உடமைகள் சேதம் ஏற்பட்டால், அதிகப்பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,தாசில்தாரிடம் மனு அளித்தால் மட்டுமே, நிவாரண பட்டியலில் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிவண்ணன் (வயது 27). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
    • மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .

    போச்சம்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி.

    இவரது மகன் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாதபோது மணிவண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கோவிந்தசாமி தந்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .

    மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி கும்மனூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 36) என்பவர் அங்கு மது வகைகளை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.

    அவரை கைது செய்த போலீசார் முனியப்பனிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • செல்போன் மூலம் வந்த ஒரு தகவலில் தங்களிடம் முதலீடு செய்தால் தினசரி வருமானம் வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    • நம்பி ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை சிவச்சந்திரன் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள முடுக்கண்டால் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் ( வயது 33). இவர் தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு செல்போன் மூலம் வந்த ஒரு தகவலில் தங்களிடம் முதலீடு செய்தால் தினசரி வருமானம் வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை சிவச்சந்திரன் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

    ஆனால் அதன்பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவச்சந்திரன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .

    இதேபோல ஓசூர் பகுதியை சேர்ந்த சாரதி என்ற தனியார் நிறுவன ஊழியருக்கு செல்போன் மூலம் வந்த தகவலை நம்பி ரூ.9 லட்சத்து 14 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இவரும் ஏமாற்றப்பட்டார்.

    இதுகுறித்து சாரதி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இரண்டு புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதற்கு தனியார் வாடகை ஆட்டோவை நம்பி இருக்கிறார்.
    • தினக்கூலியான மாணவனின் தந்தை தனக்கு நாளொன்றுக்கு வரும் வருவாயில் ஒரு நாளைக்கு தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர 200 ரூபாய் செலவாகிறது.

    ஓசூர்,

    ஓசூர் வாணியர் தெருவில் வசித்து வரும், குமார் - சரிதா தம்பதியினருக்கு. சக்திவேல் மற்றும் மாதேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சக்திவேல் பிறவியிலேயே கை மற்றும் கால் பகுதிகளில் ஊனம் ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். இவர் ஓசூரில் உள்ள பள்ளியில் தற்பொழுது பிளஸ் ஒன் படித்து வருகிறார். அதேபோல இவரது இரண்டாவது மகன் மாதேஷ் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குடும்பத் தலைவரான குமார்,கொரோனா காலகட்டத்திற்கு முன்பு தினமும் சுமார் 10 பேருக்கு கூலி வேலை வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு பூ மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

    கொரோனாவுக்கு பிறகு அவரது குடும்பத்தையே வறுமை புரட்டிப் போட்ட நிலையில், தற்பொழுது அவர் அதே மார்க்கெட்டில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார்.

    பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான தனது மூத்த மகனுக்காக குடும்பப் போராட்டங்களுக்கு இடையே மருத்துவ செலவினங்கள் செய்து 6 அறுவை சிகிச்சைகள் செய்தும் ஓரளவு மற்றொருவரின் ஆதரவுடன் நடந்து செல்லும் அளவு குணப்படுத்தி இருக்கிறார்.

    இந்த சூழலில் மாணவனும் கடந்த ஆண்டு நடைபெற்ற10-ம் வகுப்பு தேர்வில் 417 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியிலேயே இரண்டாவது மாணவனாக வந்து சாதனை படைத்துள்ளார்.

    இவ்வாறான கல்வி பயில வேண்டும் என்கின்ற ஆர்வம் உடைய தனது மகன், வெகு தொலைவிற்கு நடந்து செல்ல இயலாத நிலையில் உள்ள மாற்றத்திறனாளி என்பதால், தினமும் இவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரசு பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் அழைத்து வருவதற்கு தனியார் வாடகை ஆட்டோவை நம்பி இருக்கிறார்.

    இந்த நிலையில் தினக்கூலியான மாணவனின் தந்தை தனக்கு நாளொன்றுக்கு வரும் வருவாயில் ஒரு நாளைக்கு தனது மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று வர 200 ரூபாய் செலவாகிறது என்றும் மீதமுள்ளவை வைத்து தனது 82 வயது தாய் மற்றும் குடும்பத்தை நடத்துவது என்பது பெரிய போராட்டமாக உள்ளதாக வேதனையுடன் தெரிவித்தார்.

    மேலும் அரசு சார்பில் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை போதாத நிலையில் தனது மகன் தினமும் பள்ளிக்கு சென்று வர அரசு எந்த வகையிலாவது உதவிட முன் வர வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இல்லத்தரசியாக இருக்கும் மாணவனின் தாயாரும் தனது மகனுக்காக அரசு உதவி செய்ய கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

    அதேபோல கல்வியில் சிறந்து விளங்கும் தனக்கு மிகுந்த ஆர்வம் இருப்பதால், இன்னமும் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு தினமும் சென்று வருவதற்கும் தனது குடும்பத்தின் கடுமையான வறுமையை போக்கவும், தமிழக அரசு தனது நிலைமையை கனிவுடன் பரிசீலித்து உரிய உதவிகள் செய்ய வேண்டும் என மாணவரும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    பள்ளிக்குச் சென்று வரவும், குடும்ப வறுமை காரணமாக மிகவும் சிரமப்படும் அரசு பள்ளி மாற்றத்திறனாளி மாணவனின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பெற்றோர்களின் உருக்கமான கோரிக்கையாக உள்ளது.

    • 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
    • பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சூளகிரி,

    சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் சார்பில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.பேரண்டப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா, தலைமையில் பி.டி.ஓ.க்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், மற்றும் துணைத் தலைவர் நஞ்சப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் ஹரிஸ், செயலர் செல்வராஜ், வார்டு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஊராட்சி பகுதியில் குப்பைகள் , செடிகளை அகற்றி தூய்மை பணிகளில் ஈடுபட்டனர்.

    • நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
    • இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேய நதியானது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மார்க்கண்டேயன் ஆற்றில் குறுக்கே கர்நாடக அரசு பிரம்மாண்ட தடுப்பணை கட்டி உள்ளது. தடுப்பணை கட்டிய பிறகும் மார்க்கண்டேயன் நதியில் நீர்வரத்து குறையாமல் ஆண்டுதோறும் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஆற்றில் போதுமான தடுப்பணைகள் இல்லாததால் ஆற்றில் அவ்வப்போது ஏற்படும் வெள்ளப்பெருக்கு ஆனது சில மாதங்களிலேயே நீர் வடிந்து மீண்டும் ஆற்றில் நீர் இல்லாமல் வற்றி காணப்படுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் வீணாக சென்று நீர் கடலில் கலக்கிறது. இதை தடுக்கும் வகையில் மார்க்கண்ட நதியின் குறுக்கே தற்போது இருக்கும் தடுப்பணைகளை விட கூடுதலாக பெரிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டினால் ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும் இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர.

    மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணைகள் அனைத்தும் தற்போது சேதமடைந்துள்ளதால் போதுமான நீர் நதியில் இருப்பதில்லை எனவும் பொதுமக்கள், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கூடுதலாக தடுப்பணைகள் கட்டி ஆற்றில் நீர்வரத்து அதிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மத்தூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிபீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.
    • அ.தி.மு.க. கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்து 80 ஆயிரம் மதிபீட்டில் பூமி பூஜை நடைபெற்றது.

    இப்பூஜைக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி (வடக்கு) தலைமை வகித்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட அ.தி.மு.க. கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தேவராசன் (தெற்கு ) ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி (வ.ஊ), முருகன் (கி.ஊ), வட்டார கல்வி அலுவலர்கள் லோகநாயகி, நாசர், பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி, மாவட்ட சிறுபாண்மை பிரிவு இணை செயலாளர் பியாரேஜான், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, ஒன்றிய இணை செயலாளர் ஜெயந்தி புகழேந்தி, ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பவித்ரா சிலம்பரசன், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், கொடமாண்டப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல் ஒன்றிய துணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இந்தியாஸ் ஷாஜஹான், ஒன்றிய அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் பழனி, மாவட்ட எம்.ஜி.ஆர் .மன்றத் துணைத் தலைவர் வினாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி அக்ரி சீனிவாசன், செயலாளர் முனுசாமி, இளைஞர் பாசறை பாண்டியன், தகவல் தொழில் நுட்பபிரிபு பூபதி, திருமால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மத்தூர் அரசு பயணியர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் கட்சியில் சிறு சிறு சலசலப்பின்றியும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கூறியும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிளை கழக நிர்வாகிகளை கூட்டி கூட்டம் நடத்த வேண்டும் எனவும், யாரேனும் இறந்தால் இரங்கல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும், அத்துடன் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளின் குறைகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.

    • அறையின் மேற்கூரை பாதியளவு பெயர்ந்து கீழே விழுந்தும் எழும்பு கூடு போல் கம்பிகள் ஆங்காங்கே தெரிகிறது.
    • மேற்கூறை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் விழுந்து, விழுந்து வருகிறது .

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது, இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது,அறையின் மேற்கூரை பாதியளவு பெயர்ந்து கீழே விழுந்தும் எழும்பு கூடு போல் கம்பிகள் ஆங்காங்கே தெரிகிறது.

    மேலும் மழைக்காலங்களில் அந்த அறை முழுவதும் மழை தேங்கி நிற்கிறது. குழந்தைகள் வகுப்பறையில் இருக்கும் பொழுது, மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவது வழக்கமாக உள்ளது.

    இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்திற்கு பெரும் அச்சத்துடனே அனுப்புகின்றனர்.

    இ ந்த அங்கன்வாடி மையத்தில் கடந்த 2015- 16 ஆம் ஆண்டு ரூ.42,000 மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் முறையாக பழுது பார்க்காத காரணத்தினால் கட்டிடத்தின் மேற்கூறை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் விழுந்து, விழுந்து வருகிறது .

    இந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ,

    இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது உடனடியாக குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றுவதாகவும், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

    • ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார்.
    • அங்கு பெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

     கிருஷ்ணகிரி,

    தருமபுரியை அடுத்த பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணிக்கள் பகுதி கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது இவருக்கும் அந்த பண்ணையில் வேலை பார்த்து கொண்டிருந்த 15 வயது மாற்றுதிறனாளி சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்திற்கு அந்த சிறுமியை அழைத்து சென்றார். அங்கு பெருமாள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த சிறுமி தனது தந்தையிடம் அழுது கூறினார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.
    • கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக வெயில் பொதுமக்களை வாட்டி வைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் வேப்ப னப்பள்ளி,குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, சூளகிரி,அத்திமுகம் தீர்த்தம், நேர்லகிரி, நாச்சிக்குப்பம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கன மழை வெளுத்து வாங்கியதால் இப்பகுதியில் ஆறுகளிலும் ஏரிகளிலும் நீர் நிரம்பி வருகிறது.

    மேலும் கனமழையால் இப்பகுதிதில் குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பாலக்கோடு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குளிக்க சென்றார்.
    • வியாபாரம் செய்தபோது பிடிபட்டார்.

    கிருஷ்ணகிரி,

    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஓசூர் அருகேயுள்ள லட்சுமிதேவி நகரில் தங்கி இருசக்கர வாகனம் மூலம் கம்பளி வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் வியாபாரத்துக்கு சென்றபோது பாலக்கோடு அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குளிக்க சென்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த ஜெயக்குமார் என்ற வாலிபர் ராஜேஷின் இருசக்கர வாகனத்தை கம்பளிகளுடன் ஒட்டி சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் ராயக்கோட்டை போலீசில் இதுகுறித்து புகார் செய்தார் .

    இந்நிலையில் இருசக்கர வாகனத்தை கடத்திய ஜெயக்குமார் நரேந்திரமங்கலம் பகுதியில் கடை விரித்து கம்பளி வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

    அப்பகுதியில் திடீரென ஒரு வியாபாரி வந்ததை கண்டு அப்பகுதி வியாபாரிகள் விசாரித்தபோது ஜெயக்குமார் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.

    இதையடுத்து ராயக்கோட்டை போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரை கைது செய்து விசாரித்தபோது அவர் ராஜேஷிடம் கைவரிசை காட்டியதும் வியாபாரத்தில் இறங்கியதால் சிக்கியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×