என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரு புல் கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது:  கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம்-  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை
    X

    விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஒரு புல் கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது: கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் அடிமாட்டுக்கு விற்பனை செய்யும் நிலையில் உள்ளோம்- குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

    • போச்சம்பள்ளி வாரசந்தை மூலம் வருவாய் கிடைக்கும் நிலையில், அங்கு போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
    • தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், பெரும்பாலான ஏரிகள் வறண்டு காட்சியளிக்கிறது. தென்பெண்ணை ஆற்று நீரை மின்மோட்டார் மூலம் ஏரிகளுக்கு நிரப்பிட வேண்டும். தற்போது ஒரு புல் கட்டு ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதனால் கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மாடுகளை அடி மாட்டுக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, மானியத்தில் உலர் தீவனங்கள் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுக்க அனுமதிக் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மண்பாண்ட தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி வாரசந்தை மூலம் வருவாய் கிடைக்கும் நிலையில், அங்கு போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    அரசு பாக்கு செடிகளை மானியத்தில் வழங்க வேண்டும். தென்னையில் இருந்து நீராபானம் எடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தியும் இதுவரை இத்திட்டத்தில் பலருக்கு இணைப்புகள் வழங்கப்படவில்லை. 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை முழுமையாக விவசாய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    மானியத்தில் உலர்தீ வனம் கோடைக்காலத்தில் மட்டுமே வழங்கப்படும். மண் பாண்ட தொழிலா ளர்கள் ஏரியில் இருந்து மண் எடுக்க 31 பேர் மனு அளித்துள்ளனர். பரிசீலனையில் உள்ளது. வேளாண் பொறியியல் துறை மூலம் ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.400 கட்டணம் வசூ லிக்கப்படுகிறது. கூடுதலாக டிராக்டர்கள் பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    தென்னையில் நீராபானம் எடுப்பது தொடர்பாக எலுமிச்சகிரி வேளாண் அறிவியல் மையத்தில் பயற்சி அளிக்கப்படுகிறது. திம்மாபுரம் தோட்டக்க லைத்துறை பண்ணையில் விவசாயிகள் பாக்கு செடிகளை விலை கொடுத்து கொள்முதல் செய்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் பயிர்கள், உடமைகள் சேதம் ஏற்பட்டால், அதிகப்பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்,தாசில்தாரிடம் மனு அளித்தால் மட்டுமே, நிவாரண பட்டியலில் சேர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×