என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையம்
- அறையின் மேற்கூரை பாதியளவு பெயர்ந்து கீழே விழுந்தும் எழும்பு கூடு போல் கம்பிகள் ஆங்காங்கே தெரிகிறது.
- மேற்கூறை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் விழுந்து, விழுந்து வருகிறது .
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது, இந்த அங்கன்வாடி மையத்தில் அப்பகுதியை சேர்ந்த 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆன நிலையில் தற்போது மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து உள்ளது,அறையின் மேற்கூரை பாதியளவு பெயர்ந்து கீழே விழுந்தும் எழும்பு கூடு போல் கம்பிகள் ஆங்காங்கே தெரிகிறது.
மேலும் மழைக்காலங்களில் அந்த அறை முழுவதும் மழை தேங்கி நிற்கிறது. குழந்தைகள் வகுப்பறையில் இருக்கும் பொழுது, மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவது வழக்கமாக உள்ளது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த அங்கன்வாடி மையத்திற்கு பெரும் அச்சத்துடனே அனுப்புகின்றனர்.
இ ந்த அங்கன்வாடி மையத்தில் கடந்த 2015- 16 ஆம் ஆண்டு ரூ.42,000 மதிப்பீட்டில் பழுது பார்க்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் முறையாக பழுது பார்க்காத காரணத்தினால் கட்டிடத்தின் மேற்கூறை அனைத்தும் மிகவும் மோசமான நிலையில் விழுந்து, விழுந்து வருகிறது .
இந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ,
இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது உடனடியாக குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றுவதாகவும், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.






