என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.17.20 லட்சம் சுருட்டிய ஆசாமிகள்"

    • செல்போன் மூலம் வந்த ஒரு தகவலில் தங்களிடம் முதலீடு செய்தால் தினசரி வருமானம் வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    • நம்பி ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை சிவச்சந்திரன் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள முடுக்கண்டால் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் ( வயது 33). இவர் தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு செல்போன் மூலம் வந்த ஒரு தகவலில் தங்களிடம் முதலீடு செய்தால் தினசரி வருமானம் வரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பி ரூ.8 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை சிவச்சந்திரன் குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

    ஆனால் அதன்பிறகு அந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவச்சந்திரன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .

    இதேபோல ஓசூர் பகுதியை சேர்ந்த சாரதி என்ற தனியார் நிறுவன ஊழியருக்கு செல்போன் மூலம் வந்த தகவலை நம்பி ரூ.9 லட்சத்து 14 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இவரும் ஏமாற்றப்பட்டார்.

    இதுகுறித்து சாரதி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இரண்டு புகார்கள் குறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×