என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
- மணிவண்ணன் (வயது 27). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
- மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .
போச்சம்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த நாகரசம்பட்டி வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி.
இவரது மகன் மணிவண்ணன் (வயது 27). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாருமில்லாதபோது மணிவண்ணன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கோவிந்தசாமி தந்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .
மணிவண்ணன் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






