என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
- மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் -திருவண்ணாமலை சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் திருட்டுத்தனமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிருஷ்ணகிரி கும்மனூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 36) என்பவர் அங்கு மது வகைகளை பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
அவரை கைது செய்த போலீசார் முனியப்பனிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






