search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து 5 வருடங்களாக    ஆடி மாதத்தில் தொடர் மரணங்கள் நிகழும் கிராமம்-    நேர்த்திக்கடன் செய்த கிராம மக்கள்
    X

    நேர்த்திக்கடன் செய்த கிராம மக்களை படத்தில் காணலாம்.

    தொடர்ந்து 5 வருடங்களாக ஆடி மாதத்தில் தொடர் மரணங்கள் நிகழும் கிராமம்- நேர்த்திக்கடன் செய்த கிராம மக்கள்

    • கடந்த 5 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன.
    • ஏழு கிராமங்கள் தாண்டி அந்த எருமை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு வரவேண்டும், இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார்.

    மத்தூர்,

    இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளன.

    இக்கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் மட்டும் தொடர் மரணங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதனை கண்டறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் மத்தூர் அருகே உள்ள சாமியாரிடம் வாக்கு கேட்டுள்ளனர். கிராமத்தினுள் காத்து கருப்பு நுழைந்திருப்பதாக சாமியார் கூறியதை கேட்டதும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அதற்கு பரிகாரமாக எருமை கன்று குட்டிக்கு நவதானிய மாலைகள் அணிவித்து ஊரை சுற்றி மூன்று முறை வலம் வந்து பின்னர் ஏழு கிராமங்கள் தாண்டி அந்த எருமை கன்றுக்குட்டியை விட்டுவிட்டு வரவேண்டும்,

    இல்லையெனில் கிராமத்தில் மேலும் பல மரணங்கள் தொடரும் என சாமியார் கூறினார். இதனை நம்பி கிராம மக்கள் ஒன்று ஒன்றிணைந்து எருமை கன்று குட்டிக்கு நவதானிய மாலைகள் அணிவித்து கிராமத்தை மூன்று முறை வலம் வந்து ஏழு கிராமங்கள் தாண்டி கன்று குட்டியை விடுவித்தனர்.

    கிராமத்தில் உள்ள அனைவரும் இந் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என ஊர் முக்கியஸ்தர்கள் கூறிய நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நிகழ்வை செய்து முடித்தனர்.

    Next Story
    ×