என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே  குடியிருப்பு பகுதிக்குள் இருந்த செங்குழவி கூடு அழிப்பு
    X

    அழிக்கப்பட்ட செங்குழவி கூடு.

    போச்சம்பள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் இருந்த செங்குழவி கூடு அழிப்பு

    • அக்குழவி கூட்டில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்குழவிகள் இருந்துள்ளன.
    • தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீய்ச்சியடித்து அழித்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன.

    இக்கிராமத்தில் தருமன் என்பவரது வீட்டின் முன்பு உள்ள புங்கன் மரத்தில் சுமார் 1 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத செங்குழவி கூடு அமைத்துள்ளது. அக்குழவி கூட்டில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்குழவிகள் இருந்துள்ளன.

    புங்கன் மரத்தடியில் குழந்தைகள் விளையாடுவதாலும், ஊரின் மூத்த குடிமக்கள் மரத்தடியில் அமர்வதாலும் அவர்களை செங்குழவி தாக்க வாய்ப்புள்ளதால், செங்குழவி கூட்டின் ஆபத்தை உணர்ந்த கிராம மக்கள் ஊராட்சி தலைவர் ரங்கநாதனிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து ஊராட்சி தலைவர் ரங்கநாதன் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் அவர்களிடம் செங்குழவி கூட்டை அழித்துக்கொடுக்க மனு அளித்தார்.

    இதையடுத்து இரவு நேரத்தில் வந்த தீயணைப்பு வீரர்கள் தெரு விளக்குகளை அணைத்துவிட்டு, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவித்துவிட்டு, தண்ணீர் பீய்ச்சியடித்து கூட்டை கலைத்து அழித்தனர்.

    மிகப்பெரிய ராட்ச செங்குழவி கூடு அழிக்கப்பட்டதால் ஊர் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

    Next Story
    ×