என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தியால் மேலும் அதிகரிக்கும்: தொடர் விசேஷ நாட்களால் ஓசூரில் பூக்கள் விலை உயர்வு
- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக மலர் விற்பனை பாதிக்கப்பட்டது.
- வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் வருவாய் இழப்பை சந்தித்தனர்.
ஓசூர்,
ஓசூர், தேன்கனிக் கோட்டை, தளி, கெலமங்கலம், பாகலூர், மத்திகிரி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் இதமான தட்பவெட்பநிலை மற்றும் வளமான மண்வளம் காரணமாக ரோஜா, பட்டன்ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு மல்லி, சம்பங்கி மற்றும் அலங்காரப்பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட 30 வகையான மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் வாசமுள்ள மலர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தை களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், இப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்தும், திறந்த வெளியில் சொட்டுநீர் பாசன முறையிலும் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக மலர் விற்பனை பாதிக்கப்பட்டது.
நடப் பாண்டில் கொரோனா கட்டுப்பாடுகள் செய்யப்பட்டு உள்ள நிலையில், வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் படவுள்ளதால், மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், நேற்று (24-ந் தேதி) பிரதோஷம், நாளை (26-ந் தேதி) அமாவாசை என அடுத்தடுத்து விசேஷ நாட்கள் வருவதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனையான குண்டு மல்லி தற்போது ரூ.600 முதல் ரூ.900 வரை விலை உயர்ந்துள்ளது. கரோனா இன்றி விழா
இதுதொடர்பாக ஓசூர் மலர் சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கு காரணமாக இங்கு விளையும் மலர்களை சென்னை உள்ளிட்ட தமிழக நகரப் பகுதிகளுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு, விவசாயிகள், வியாபாரிகள் வருவாய் இழப்பை சந்தித்தனர்.
இதேபோல, மற்ற பூக்களில் விலையும் உயர்ந்துள்ளது. அதன் விவரம் (அடைப்புக் குறியில் கடந்த வார விலை):
முல்லை ரூ.500 (ரூ.250) சம்பங்கி ரூ.40 (ரூ.20) சாமந்தி ரூ.160 (70), பட்டன் ரோஜா ரூ.140 (60) கனகாம்பரம் ரூ.800 (ரூ.400) என அனைத்து மலர்களின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு பூக்களின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், வரும் நாட்களில் விலை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






