என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

    • ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • இது ஒரு இலவச பணி ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை(26-ந் தேதி) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு: -

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இம்மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையான நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில்) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இது ஒரு இலவச பணி ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் 10, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக் குறிப்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×