என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி முதல்வரிடம், மாணவி வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்.
கட்டுரைப் போட்டியில் வென்ற ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரி மாணவிக்கு பாராட்டு
- இவருக்கு, முன்னாள் தமிழக அமைச்சர் வைகை செல்வன் சான்றிதழும், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.
- கணிதத்துறை மாணவி ராமலட்சுமி, 3-வது இடம் பெற்றார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும், ஊத்தங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவை அறக்கட்டளைச் செயலமைப்பும் இணைந்து கட்டுரைபோட்டி நடத்தின.
இப்போட்டியில், தமிழர் பதித்த தடங்கள் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில், ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி இரண்டாமாண்டு கணிதத்துறை மாணவி ராமலட்சுமி, 3-வது இடம் பெற்றார்.
இவருக்கு, முன்னாள் தமிழக அமைச்சர் வைகை செல்வன் சான்றிதழும், கேடயமும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.
மேலும் இந்த மாணவியை, ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் முத்துமணி மற்றும் தமிழாய்வுத்துறை பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
Next Story






