என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்திரியை தாக்கும் வண்டு"

    • தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர்.
    • விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் வேதனை

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி பகுதிகளில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    போச்சம்பள்ளி உள்ள அகரம், வேலம்பட்டி, பனங்காட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு கத்திரிக்காய், மற்றும் முள்ளுக்கத்திரிகாய் உள்ளிட்ட பல ரக கத்திரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளனர்.

    கத்திரிக்காய் நடவு செய்து 40 நாட்களில் அறுவடைக்கு வரும், அடுத்து 110 நாட்கள் வரை பலன் கிடைக்கும். இங்கு விளைவிக்கப்படும் கத்தரிக்காய்கள் உள்ளூர் வாரச்சந்தைகள், மற்றும் வெளி மாவட்டத்திற்கு அனுப்ப படுகிறது.

    நடப்பாண்டில் நடவு செய்யப்பட்ட கத்தரிக்காய் நாற்றுகளில், காய்கள் சாகுபடிக்கு வந்துள்ளது. தொடர் மழையாலும், பூச்சி, மற்றும் வேர்புழு தாக்குதலால் கத்தரிக்காயில் விளைச்சல் பாதிக்கப்பட்டு கிழே கொட்டி வருகின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் தெளித்தும் பலனில்லை. ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகளுக்கு மேல் கத்தரிக்காய் கிடைக்க வேண்டும்.

    ஆனால் தற்போது மகசூல் சரிபாதியாக குறைந்துள்ளது. எனவே புழுக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும்.

    இவ்வாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×