என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாளாப்பள்ளி மலையில்  அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாறை ஓவியம் குறித்து பயிற்சி
    X

    தாளாப்பள்ளி மலையில் அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாறை ஓவியம் குறித்து பயிற்சி

    • சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து மற்றும் கருஞ்சாந்து ஓவியங்களைக் காட்டி நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இம்மலையில் மொத்தம் 8 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. அதில் 4 இடங்கள் காட்டப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 15 நாட்கள் தொல்லியல் பயிலரங்கம் நடந்து வருகிறது. இதில் தமிழ்த்துறை முதுகலை 2-ம் ஆண்டு பயிலும் 32 மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பா ட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணை ப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆய்வாளர்கள் சதானந்த கிருஷ்ணகுமார், வரலாறு ஆசிரியர் ரவி, சரவணகுமார், மாருதி மனோகர் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

    இப்பயிற்சியின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே ராயக்கோட்டை சாலையில் உள்ள தாளாப்பள்ளி மலையில் காணப்படும் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து மற்றும் கருஞ்சாந்து ஓவியங்களைக் காட்டி நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

    இம்மலையில் மொத்தம் 8 இடங்களில் பாறை ஓவியங்கள் உள்ளன. அதில் 4 இடங்கள் காட்டப்பட்டன. இப்பயிற்சியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடங்கி, இன்று வரையிலான வரலாற்றை எழுதத் தேவையான முதன்மை சான்றுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகின்றன.

    இப்பயிற்சியினை அருங்காட்சியகப் பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

    Next Story
    ×