என் மலர்
நீங்கள் தேடியது "இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பு"
- 1 மணிநேரம் போராடி விரட்டினர்.
- பாம்பை பார்க் காமல் இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கும்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி-ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை பிரிவு சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நல்லாரன் பள்ளியை சேர்ந்த கோவிந்தப்பா (வயது 55) என்ற கொத்தமல்லி கீரை வியாரி தனது இருசக்கரவாகனத்தை சாலை ஒரமாக நிறுத்திவிட்டு வியாபார விஷயமாக மற்றவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
தீடீர் என அந்த வழியாக வந்த 3 அடி நீளம் இருந்த விஷ பாம்பு கோவிந்தப்பாவின் வாகனத்தில் நுழைந்தது. இ தைப் பார்த்த கோவிந்தப்பா மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்பு 1 மணி நேரம் போராடி அந்த பாம்பை விரட்டினர். பாம்பை பார்க் காமல் இருந்திருந்தால் உயிருக்கு ஆபத்து கூட ஏற்பட்டிருக்கும்.
பொதுவாக மரம், செடிகள், குப்பைகள் நிறைந்த பகுதிகளில் மட்டுமல்ல பரபரப்பான சாலைகளில் கூட வாகனத்தை ஜாக்கிரதையாக விட வேண்டும் என இந்த சம்பவம் உணர்த்துகிறது.






