என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவர்கள் போராட்டம்"
- இன்று காலை, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இது குறித்து அறிந்த , ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர்-முத்தாலி சாலையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் சென்று வர காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதாகவும் அதனால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி இன்று காலை, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம், சுமார் அரைமணி நேரம் நீடித்தது. இது குறித்து அறிந்த , ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் அங்கு சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






