என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.3.5 லட்சம் நகை, பணம் கொள்ளை
- பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
- 10 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் செவுளூர் கூட்டு ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 11-ந்தேதியன்று தனது கணவரை அழைத்துக்கொண்டு ஓசூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ சிகிச்சைக்காக அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று வீடு திரும்பிய கலைவாணி கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கலைவாணி காவேரிப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து ரூ.3.50 லட்சம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்.






