என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சு மற்றும் கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டிய காட்சி.
மாவட்ட அளவில் நடந்த போட்டியில் அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை
- கலை மற்றும் இலக்கியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
- பரிசு காசோலை கொடுத்து பாராட்டி வாழ்த்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் முத்தமிழ் இலக்கியப்பேரவை சார்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கலை மற்றும் இலக்கியம் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் பேச்சுபோட்டியில் பாவக்கல் அரசுப்பள்ளியை சார்ந்த 10-ம் வகுப்பு மாணவி சங்கீதா, கவிதைப்போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி பவித்ரா ஆகியோர் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
மேலும் கவிதைப்போட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடம் பெற்றார். மாணவிகளை பாராட்டும் வகையில் இன்று பாவக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியநாதன், உதவி தலைமை ஆசிரியர் அவுத்தர் பாஷா மாணவிகளுக்கு முத்தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பெற்ற சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசு காசோலை கொடுத்து பாராட்டி வாழ்த்தினர். மேலும் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சந்திரசேகர், சம்பூர்ணம், தமிழ்ச்செல்வி மற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டினர். உடன் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.






