என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிமுகம் செய்து வைத்த போது எடுத்த படம்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் சி.சி.டி.வி. கேமரா இல்லாத இடங்களில் பாதுகாப்பு பெட்டகம் -பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க ஏற்பாடு
- பெண்கள் தங்களின் புகார்களை எழுத்து மூலமாக அளிக்கலாம்.
- ஒரு தன்னார்வலர் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பலவேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 348 மனுக்களை கொடுத்தனர்.
அதை பெற்றுக் கொண்ட கலெக்டர் அந்த மனுக்களின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் பணிபுரிய கூடிய இடங்களில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பாதுகாப்பு பெட்டகத்தை கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுவதை தடுக்க பாதுகாப்பு பெட்டகம் அறிமுகம ்செய்யப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் வைத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண்கள் தங்களின் புகார்களை எழுத்து மூலமாக அளிக்கலாம்.
சி.சி.டி.வி. கேமரா இல்லாத இடங்களில் இந்த பெட்டகம் வைக்க வேண்டும். இந்த பெட்டகத்தில் புகார்கள் பெறப்படும போது நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழுவின் உறுப்பினர், குழுவில் இடம் பெற்றுள்ள வெளி நபரான ஒரு தன்னார்வலர் முன்னிலையில் பெட்டகம் திறக்கப்பட வேண்டும்.
இதில் வரும் புகார்களுக்கு பதிவேடு பராமரித்து அது குறித்த விவரத்தை காலமுறை அறிக்கையாக மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளூர் புகார் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.






