என் மலர்
நீங்கள் தேடியது "குடிசை எரிந்து தொழிலாளி பலி"
- மாந்தோப்பில் உள்ள குடிசையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் கட்டிலில் படுத்திருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக குடிசை தீப்பற்றியதில் செல்வம் உயிரிழந்தார்.
காவேரிப்பட்டினம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள அங்கினாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (52). இவருடைய 2மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. வெல்டிங் தொழில் செய்து வந்தார்.
அங்கினாம்பட்டியை கிராமத்தில் அவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள குடிசையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் கட்டிலில் படுத்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குடிசை தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் செல்வம் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி விசாரணை நடத்தி வருகிறார்.






