என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிப்பட்டி ஊராட்சி பெரமகவுண்டனூர் பகுதியில் தார்சாலை அமைக்க பூஜை நடந்த காட்சி.
மத்தூர் ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
- எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.
- ஊராட்சி செயலர்கள் ஷாலினி, மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சியில், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலும், அதே போல் பெரமகவுண்டனூர் பகுதியில் ஸ்ரீ முருகர் கோவில் அருகில் இருந்து கால்நடை மருத்துவமனை வரை 850 மீட்டர் தொலைவு ஒரடுக்கு தார் சாலை அமைக்க ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி காமாட்சிப்பட்டி பகுதியில் மழை நீர் தடுப்பு சுவர் அமைக்க ரூ.7. லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்செல்வம் பூமி பூஜையை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் ஒன்றிய குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், திமுக ஒன்றிய செயலாளர் குண வசந்தரசு, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சக்கரவர்த்தி (வடக்கு), தேவராசன் (தெற்கு ) வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி ( வ.ஊ), முருகன் (கி.ஊ), வாலிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பரந்தாமன், முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஈ.பியாரோஜான், சிவம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் மனோகரன், ராமகிருஷ்ணம்பதி ஊராட்சி மன்றத் தலைவர் இந்திரா ராமன், கிருஷ்ணகிரி, தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பனைபொருள் சம்மேளனத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் மணிவண்ணன், வலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சபிதா சேட்டு, கொடமாண்டப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் வீரமணி, தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, இளைஞர் பாசறை பாண்டியன், ஊராட்சி செயலர்கள் ஷாலினி, மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.






