என் மலர்
நீங்கள் தேடியது "மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு"
- கிணற்றில் குதித்த மனோஜ்குமார் நீண்ட நேரம் வெளியே வராததால் நண்பர்கள் அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.
- .நீண்ட நேரம் தேடி மனோஜ்குமார் உடலை கரைக்கு கொண்டு கொண்டுவந்த போது சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கண்ணசந்திரம் கிராமத்தை சேர்ந்த அப்போஜிராவ் எனபவரின் மகன் மனோஜ் குமார். இவர் உத்தனப்பள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை கிராமத்தின் அருகே உள்ள கிணற்றில் மனோஜ்குமார் நண்பருடன் சேர்ந்து குளிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றில் குதித்த மனோஜ்குமார் நீண்ட நேரம் வெளியே வராததால் நண்பர்கள் அக்கபக்கத்தினரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மனோஜ்குமார் கிணற்றில் மூழ்கி இருப்பதை கண்டு உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சிறுவனை மீட்க ராயக்கோட்டையில் இருந்து தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த மீட்பு குழுவினர் நீண்ட நேரம் மனோஜ்குமார் உடலை கிணற்றில் தேடினர்.நீண்ட நேரம் தேடி மனோஜ்குமார் உடலை கரைக்கு கொண்டு கொண்டுவந்த போது சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றிய உத்தனப்பள்ளி போலீசார் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






