என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "67 வயது முதியவர் இந்தியா முழுவதும் நடைபயணம்"

    • கடந்த 8 மாதங்களாக 14 மாநிலங்களைச் சுற்றி கொண்டு தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.
    • தினமும் 40 கிலோ மீட்டர் நடந்து செல்லும் இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகார் பாட்னாவில் மீண்டும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கையில் இந்திய தேசிய கொடியுடன் ஒரு முதியவர் வேகமாக நடந்து கொண்டு சென்றிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் சிலர் இவரை கண்டு கையில் தேசிய கொடியுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டபோது பொதுமக்களுக்கு மிகப்பெரிய வியப்பு ஏற்படுத்தும் செய்தியை கூறினார் அந்த முதியவர்.

    கையில் தேசிய கொடியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் உலக மக்கள் அமைதிக்காகவும், இந்தியா முழுவதும் 28 மாநிலங்களையும் நடை பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு செய்வது வருவதாகக் கூறினார்.

    மேலும் ஜனவரி 26-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து புறப்பட்ட இவர் கடந்த 8 மாதங்களாக 14 மாநிலங்களைச் சுற்றி கொண்டு தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறினார்.

    மேலும் தினமும் 40 கிலோ மீட்டர் நடந்து செல்லும் இவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பீகார் பாட்னாவில் மீண்டும் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

    இந்த செய்தியை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை வெகுவாக பாராட்டி பொன்னாடை போர்த்தி ஊக்குவித்தனர்.

    மேலும் தேவையான உணவு மற்றும் பழங்களை கொடுத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    67 வயது முதியவரான ஒருவர் உலக மக்கள் அமைதிக்காகவும் இளைஞர்களை நல்வழி படுத்தவும் இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இவரை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×