என் மலர்
கிருஷ்ணகிரி
- இன்று மதியம் வந்த போது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் இறந்தவர்கள் ராணுவ வீரர் சுந்தரேசன் (வயது45), கணேசன்(35) ஆகியோர் என்பது ெதரியவந்தது.
கிருஷ்ணகிரி,
பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு திருவண்ணாமலை நோக்கி கர்நாடகா அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி அருகே இன்று மதியம் வந்த போது தேசிய நெடுஞ்சாலை குறுக்கே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கடக்க முயன்றனர்.
அப்போது கர்நாடகா அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கின் பெட்ரோல் டேங்க்கில் மோதியதால் வெடித்து சிதறியது. இதில் பயணம் செய்த 2 பேரும் உடல் கருகி இறந்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய பஸ்சும் தீ குபுகுபுவென பற்றி எரிந்தது. இதனை பார்த்த பயணிகள் அலறினர். பஸ்சில் தீ கொளுந்து விட்டு எரிவதால் பயணிகள் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே குதித்து தப்பினர்.
இந்த விபத்து குறித்து தீயணைப்பு த்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்தனர். இந்த விபத்தால் சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி பற்றி எரிந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்து அணை த்தனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரிசெய்து சீரமைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்தில் இறந்தவர்கள் ராணுவ வீரர் சுந்தரேசன் (வயது45), கணேசன்(35) ஆகியோர் என்பது ெதரியவந்தது.
விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போலுப்பள்ளியில் உள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சக்தி (வயது24), சுப்பிரமணி (29), ஆனந் (23), ரமேஷ் (30), சபரி (28), சிவக்குமார் (25) ஆகிய 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் ஒரு மாந்தோப்பில் பணம் வைத்து சூதாடியதாக வேலம்பட்டி அடுத்த அனகோடி பகுதியை சேர்ந்த மணி மகன் சக்தி (வயது24), எருமாம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி (29), பட்டனூரை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந் (23), குட்டூரை சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (30), செல்லம்பட்டியை சேர்ந்த வேடியப்பன் மகன் சபரி (28), கூரம்பட்டியை சேர்ந்த சின்ராஸ் மகன் சிவக்குமார் (25) ஆகிய 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 2500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
- பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை
- திருட்டு நடந்த டீ கடையின் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான் (வயது29). இவர் நான்கு ரோட்டில் டீ கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் கடையின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ரகுமான் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு நடந்த டீ கடையின் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது இருசக்கர வாகனம் திருடியது திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் அருகே திருபனங்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் (48) என்பவர் என தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.
- ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியப்பா என்பவரது மகன் மோகன் (24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்,
இந்த நிலையில் நேற்று மாலை, தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள டிவிஎஸ் ஷோரூம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பெங்களுரில் இருந்து சேலம் நோக்கி வந்த ெரயில் மோதி காயமடைந்தார்.
உடனடியாக ெரயில்வே போலீசார் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர், ஆனால் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரயிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் வெளிநாட்டு டிவி வாங்குவதற்காக கணபதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.
- கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராகுலை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கோபிரட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது46). இவர் வெளிநாட்டு டிவி வாங்குவதற்காக கணபதி நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பரிடம் ரூ.25 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் டிவி இன்னும் வழங்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இது குறித்து கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராகுலை கைது செய்தனர்.
- முனிராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை இரும்புக் கம்பியால் சிலர் தாக்கியதாக தெரிகிறது.
- 4 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.
ஓசூர்,
ஓசூரில் பா.ம.க.சார்பில் பேனர் தயாரித்து வைத்தது தொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ் மற்றும் சிலரிடையே நேற்று தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முனிராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களை இரும்புக் கம்பியால் சிலர் தாக்கியதாக தெரிகிறது.
இதில் முனிராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் 4 பேர் லேசான காயமடைந்து சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது.
- இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
ஓசூர்,
ஓசூர் மோரனபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ராகு, கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி திருநாள் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.
இதனையொட்டி கோவிலில் உள்ள, ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதே போல மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் ஆராதனைகளும் மகாதீபாராதனையும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதி யுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனர்.
- திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து ரம்யா உள்பட 6 பேரை கைது செய்தனர்.
- தங்களுடைய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
- நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) செயற்பொ றியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், கிருஷ்ணகிரி கோட்டத்திற்குட்டப்டட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அதன்படி, நாளை (திங்கட்கிழமை) முதல் 11-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை கிருஷ்ணகிரி உபகோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி சந்தைபேட்டை, பெரியார் நகர், போகனப்பள்ளி, பெத்தனப்பள்ளி, போத்திநாயனப்பள்ளி, மேல்சோமார்பேட்டை, லைன்கொல்லை, அகசிப்பள்ளி, தேவ சமுத்திரம், பெரிய கோட்டப்பள்ளி, மேல்கரடி குறி, மேல்பட்டி, பி.ஜி.புதூர், செம்படமுத்தூர், தாளாப்பள்ளி, பாலகுறி, பூவத்தி, குந்தாரப்பள்ளி, தானம்பட்டி, நரணிகுப்பம் ஆகிய கிராமங்களிலும்,
காவேரிப்பட்டணம் உபக்கோட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், போத்தாபுரம் ரேஷன் கடை அருகில், பையூர் பெரியார் சிலை அருகில், நெடுங்கல் பஸ் நிறுத்தம், குண்டலப்பள்ளி அரசு துவக்கப்பள்ளி அருகில், தாசம்பட்டி கூட் ரோடு, மோரனஅள்ளி இந்தியன் வங்கி அருகில், அகரம் கூட் ரோடு, தட்ரஅள்ளி கூட் ரோடு ஆகிய இடங்களிலும், கிருஷ்ணகிரி நகர உபக்கோட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணகிரி பஜார் தெரு, தியாகரசனப்பள்ளி, காமன்தொட்டி, உலகம், சாமல்பள்ளம், நேரலகிரி, நல்லூர், நடுசாலை, இ.ஜி.புதூர், வேப்பனஹள்ளி பிடிஓ அலுவலகம் அருகில், நாச்சிக்குப்பம் கூட் ரோடு ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் இணைப்பு எண் (9 இலக்க அல்லது கட்டண ரசீது), ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தங்களது செல்போன் எண் (ஓடிபி எண் தெரிந்து கொள்ள) ஆகியவற்றுடன் வர வேண்டும். மேலும், மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இயக்க வருகிற 31-ந் தேதியன்று கடைசி நாள் என்பதால், இச்சிறப்பு முகாமினை பயன்படுத்தி ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டால் மின் பயனீட்டு கட்டணங்களை எளிதாக செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- துரத்தி சென்ற ராஜேந்திரன் அவரை சரமாரியாக தலை, கை, உடல் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர்.
ஓசூர்,
தாலுகா அலுவலகம் முன்பு ஆன்லைன் சென்டர் நடத்தி வருபவர் கல்பனா (35) இவர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவியாக உள்ளார். இவர் நடத்தி வரும் ஆன்லைன் சென்டர் கடையை ஓசூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி கொண்டு கல்பனாவுக்கு மேல் வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து அறிந்த கடை உரிமையாளர், ராஜேந்திரனை அழைத்து மேல் வாடகைக்கு விடக்கூடாது எனக்கூறி கடையை காலி செய்ய கூறினார்.
இதனையடுத்து ராஜேந்திரன், கல்பனாவிடம் கடையை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் கல்பனா கடையை காலி செய்ய முடியாது. தான் கொடுத்த 10 லட்சம் ரூபாயை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கல்பனா அளித்த புகாரில் ராஜேந்திரன் மீது ஓசூர் டவுன் போலீசார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்திருந்தனர்.
ராஜேந்திரனுக்கு கல்பனா மீது முன் விரோதம் இருந்த நிலையில் நேற்று அவர் கல்பனாவின் ஆன்லைன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது கல்பனா ராஜேந்திரனை உள்ளே வரக்கூடாது என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தான் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவர் முகத்தில் தூவி அவரை தாக்கியுள்ளார். பின்னர் அருகில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராஜேந்திரன் அவரை வெட்ட துரத்தியுள்ளார். அச்சமடைந்த கல்பனா அருகில் இருந்த ஒரு கடைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அப்போது கல்பனாவின் ஆன்லைன் சென்டரில் இருந்த சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் நரசிம்மய்யா (65) என்பவர் ராஜேந்திரனிடம் ஏன் அந்த பெண்ணை தாக்குகிறாய் என கேட்டுள்ளார்.
ராஜேந்திரனுக்கும் நரசிம்மய்யாவுக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. அவர் மீது கடும் கோபத்தில் இருந்த ராஜேந்திரன் கத்தியை எடுத்து நரசிம்மய்யாவை தாக்கியுள்ளார்.
வெட்டுக்காயம் அடைந்த நரசிம்மையா தப்பித்துக் கொள்ள அங்கிருந்து அருகிலுள்ள காவலர் குடியிருப்புக்கு ஓடி உள்ளார். ஆனால் துரத்தி சென்ற ராஜேந்திரன் அவரை சரமாரியாக தலை, கை, உடல் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேந்திரனை பிடித்து கைது செய்தனர். வெட்டுக்காயம் அடைந்த நரசிம்மய்யாவை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக பெண் மீது மிளகாய் பொடி தூவி தாக்கி விட்டு, தடுக்க வந்தவரை அரிவாளால் வெட்டிய நபரால் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள லாக்கர், ஹோம்தியேட்டர், பணம் ஆகியவை திருடியுள்ளனர்.
- கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 80 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிசென்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் தளி பகுதியை சேர்ந்த விக்னேஸ் (வயது28) என்பவர் எலக்ட்ரானிக்கல் கடை நடத்தி வந்தார்.
நேற்று மர்ம நபர்கள் அந்த கடையில் இருந்து 22 ஆயிரம் மதிப்புள்ள லாக்கர், ஹோம்தியேட்டர், பணம் ஆகியவை திருடியுள்ளனர்.
இதே போல் கிருஷ்ணகிரி அடுத்துள்ள மாதேப்பள்ளியில் சவுளுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த 80 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பிசென்றுள்ளனர்.
இது குறித்து அவர்கள் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






